பொத்துவில் பிரதேச சபைக்குச் சொந்தமான சர்வோதயபுரம் பகுதியில் அமைந்துள்ள திண்மக்கழிவு சேகரிப்பு நில நிரப்புத் தளத்தில் குவிந்திருந்த கழிவுகளை ஒதுக்கி மட்டப்படுத்தும் வேலைத்திட்டம் நேற்று(23.08.2025) இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் பொத்துவில் பிரதேச சபை தவிசாளர், கௌரவ உறுப்பினர்கள், சபை உத்தியோகத்தர்கள், ஊழியர்கள், முச்சக்கர வண்டி உரிமையாளர் சங்க உறுப்பினர்கள் மற்றும் Sustainable Clean Sri Lanka அமைப்பினரும் பங்கேற்றனர்.
மேலும், வரும் திங்கட்கிழமை குறித்த நில நிரப்புத் தளத்தில் மிகப்பெரிய சிரமதான நிகழ்வு நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த நிகழ்வில் பொதுமக்கள் அமைப்புகள், தன்னார்வ தொண்டர்கள் மற்றும் விளையாட்டு கழகங்கள் அனைத்தும் இணைந்து பங்கேற்குமாறு, பிரதேச சபை தவிசாளர் அழைப்பு விடுத்துள்ளார்.