Top News
| அட்டாளைச்சேனை கூட்டத்தில் ஊடகவியலாளர்களை விரட்டி ஜனநாயகத்தை குழிதோண்டிப் புதைத்த ஆதம்பாவா எம்பி | | தேசிய உற்பத்தித்திறன் பாராட்டு விருது பெற்று அட்டாளைச்சேனைக்கு பெருமை சேர்த்த ஸஹ்ரா வித்தியாலயம் | | அட்டாளைச்சேனை கிழக்கிலங்கை அறபுக் கல்லூரியில் 2027 ஆம் ஆண்டுக்கான புதிய மாணவர் அனுமதிக்கான விண்ணப்பம் கோரல் |
Oct 15, 2026

மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரஃப் அவர்களின் 25வது நினைவேந்தலுக்கான விசேட கூட்டம் அட்டாளைச்சேனையில்

Posted on September 9, 2025 by Admin | 367 Views

அட்டாளைச்சேனையில் பெருந்தலைவர் எம்.எச்.எம். அஷ்ரஃப் அவர்களின் 25ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுக்கான முன்னேற்பாடு கூட்டம் இனிதே நடந்தேறியது.

மறைந்த பெருந்தலைவர் எம்.எச்.எம். அஷ்ரஃப் அவர்களின் 25ஆம் ஆண்டு நினைவேந்தல் தினத்தை முன்னிட்டு நடைபெறவுள்ள கத்தமுல் குர்ஆன் மற்றும் துஆப் பிரார்த்தனை நிகழ்வை முன்னெடுக்க சிறப்பு கூட்டம் ஒன்று அட்டாளைச்சேனையில் நடைபெற்றது.

இந்த கூட்டம் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அட்டாளைச்சேனை அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.எஸ். உதுமாலெப்பை அவர்களின் தலைமையில் அட்டாளைச்சேனை சராஹ் பீச் ரிஸோர்ட் கூட்ட மண்டபத்தில் நடந்தது.

இந்நிகழ்வில் அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளர் ஏ.எஸ்.எம். உவைஸ், அம்பாறை மாவட்ட செயலாளர் ஏ.சி. சமால்தீன், பிரதேச சபை உறுப்பினர்கள் ஏ.எல். பாயிஸ், ஏ.சி. நியாஸ், எஸ்.எம். றியாஸ், தொழிலதிபர் ஏ.கே. அமீர் உள்ளிட்ட கட்சி முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.