முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினர் இன்று (15) கைது செய்துள்ளனர்.
இன்று காலை வாக்குமூலம் அளிக்க ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்த அவர், விசாரணை முடிவில் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த அரசாங்கத்தின் காலத்தில் விவசாயப் பணிகளுக்காக இஸ்ரேலுக்கு தொழிலாளர்களை அனுப்பியதில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பிலான விசாரணையின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில், தாம் கைது செய்யப்படுவதற்கு முன்னர் முன்பிணை கோரிய மனுஷ நாணயக்காரவின் மனுவை கொழும்பு நீதவான் நீதிமன்றம் நேற்று நிராகரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.