அறுவை சிகிச்சை இல்லாமல் மூளையில் ஏற்படும் துல்லியமான மாற்றங்களை கண்டறியக்கூடிய புதிய MRI இமேஜிங் ஸ்கேன் தொழில்நுட்பத்தை சீனாவின் தியான்ஜின் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.
இந்த நவீன முறை, மூளை-கணினி இடைமுக (BCI) தொழில்நுட்பத்தில் பயன்படக்கூடியதாக இருந்து, கடுமையான நரம்பு கோளாறுகளை கண்காணிப்பதிலும், மனநலம் தொடர்பான மதிப்பீடுகளை மேற்கொள்ளவும் உதவுமென ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
புதிய MRI தொழில்நுட்பத்தின் மூலம் மருத்துவர்கள் மூளையின் நரம்பு செயல்பாடுகள், இரத்த ஓட்டம், திசு மாற்றங்கள் போன்றவற்றை மிகத் துல்லியமாகப் பதிவு செய்ய முடியும். இதனால் அல்சைமர், பார்கின்சன், பக்கவாதம் போன்ற நோய்களை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை அளிக்கும் வழி திறக்கப்படும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.