Top News
| மருதமுனையில் கோர விபத்து:அரச உத்தியோகத்தர் சம்பவ இடத்திலேயே பலி | | உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் அதிரடி மாற்றங்கள் | | அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு பைத்துல் ஹிக்மா நிறுவனத்தின் மகத்தான கௌரவம் |
Jul 16, 2026

ஐந்து புதிய அரசியல் கட்சிகளுக்கு அனுமதி

Posted on January 22, 2026 by Admin | 243 Views

புதிய அரசியல் கட்சிகள் ஐந்தை பதிவு செய்வதற்காக தேர்தல் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

சோசலிச மக்கள் முன்னணி, மக்கள் பங்கேற்பு ஜனநாயக முன்னணி, மலையக அரசியல் அரங்கம், சமத்துவக் கட்சி மற்றும் புரட்சிகர மக்கள் சக்தி ஆகிய அரசியல் கட்சிகளுக்கே இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

கடந்த ஆண்டிற்காக புதிய அரசியல் கட்சிகளை பதிவு செய்வதற்காக நடத்தப்பட்ட நேர்முகத் தேர்வுகளின் பின்னரே குறித்த ஐந்து கட்சிகளுக்கும் பதிவு செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

2025 ஆம் ஆண்டில் மொத்தமாக 83 அரசியல் கட்சிகள் பதிவுக்காக விண்ணப்பித்திருந்த நிலையில் அவற்றில் 47 கட்சிகள் ஆரம்ப கட்ட நேர்முகத் தேர்வுக்குத் தெரிவு செய்யப்பட்டிருந்தன. தொடர்ந்து நடைபெற்ற இறுதி நேர்முகத் தேர்வுகளின் அடிப்படையில் ஐந்து கட்சிகள் பதிவு செய்யத் தகுதி பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன் மூலம் நாட்டில் தற்போது பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளின் எண்ணிக்கை 85 ஆக உயர்ந்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.