Top News
| அட்டாளைச்சேனை கூட்டத்தில் ஊடகவியலாளர்களை விரட்டி ஜனநாயகத்தை குழிதோண்டிப் புதைத்த ஆதம்பாவா எம்பி | | தேசிய உற்பத்தித்திறன் பாராட்டு விருது பெற்று அட்டாளைச்சேனைக்கு பெருமை சேர்த்த ஸஹ்ரா வித்தியாலயம் | | அட்டாளைச்சேனை கிழக்கிலங்கை அறபுக் கல்லூரியில் 2027 ஆம் ஆண்டுக்கான புதிய மாணவர் அனுமதிக்கான விண்ணப்பம் கோரல் |
Oct 15, 2026

கலைஞர் சுபதம் விருது பெற்ற பாலமுனையை சேர்ந்த விரிவுரையாளர் அப்துல் லெத்தீப்

Posted on February 1, 2026 by Admin | 364 Views

(பாலமுனை செய்தியாளர்-ஹனி)

அட்டாளைச்சேனை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கலைஞர்களை வாழ்த்தி கௌரவிக்கும் நிகழ்வு அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக அபேவிக்கிரம, மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.ஜெகராஜன் மற்றும் பிரதேச செயலாளர் ஆகியோரின் பங்கேற்புடன் கடந்த 27.01.2026 ஆம் திகதி அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் இடம் பெற்றது.

இந்த நிகழ்வின் போது கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் 2026 ஆம் ஆண்டுக்கான ‘கலைஞர் சுபதம்’ விருது பாலமுனையைச் சேர்ந்த ஓய்வுநிலை சிரேஷ்ட விரிவுரையாளர் எம். ஐ. அப்துல் லத்தீப் அவர்களுக்கு வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.