Top News
| கிழக்கு முஸ்லிம்களின் பாரம்பரிய ‘மாப்பிள்ளை ஊர்வலத்தை’ அரங்கேற்றி அசத்தியது அட்டாளைச்சேனை கல்வியியற் கல்லூரி | | யுத்த காலத்தில் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான ஆரம்பகட்ட விசாரணை அக்கரைப்பற்றில் முன்னெடுப்பு | | அட்டாளைச்சேனை கூட்டத்தில் ஊடகவியலாளர்களை விரட்டி ஜனநாயகத்தை குழிதோண்டிப் புதைத்த ஆதம்பாவா எம்பி |
Oct 15, 2026

முனையூர் இ.மு.ஜி.பாவின் சிறுகதைத் தொகுதி பாலமுனையில் வெளியீடு

Posted on February 2, 2026 by Admin | 308 Views

(பாலமுனை செய்தியாளர்-ஹனி)

முனையூர் இ.மு ஜி பா வின் சிறுகதைத் தொகுதி வெளியீட்டு நிகழ்வு பாவலர் பாலமுனை பாறூக் அவர்களின் தலைமையில் 2026.02.01ம் திகதி பாலமுனை அல்-ஹிதாயா மகளிர் கல்லூரி அரங்கத்தில் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதித் தேசிய அமைப்பாளருமான எம்.எஸ். உதுமாலெப்பை, அட்டாளைச்சேனை பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் ஏ.எஸ்.எம். உவைஸ், சம்மாந்துறை பிரதேச செயலாளர் ஏ.எல். ஹனீபா, ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாலமுனை அமைப்பாளர் அலியார் மற்றும் முக்கிய பிரமுகர்கள் மற்றும் எழுத்தாளர்களும் கலந்து கொண்டனர்.

நிகழ்வின் போது நூலாசிரியரின் இலக்கியப் பங்களிப்பு குறித்து பாராட்டுரைகள் இடம்பெற்றதுடன் சிறுகதைத் தொகுதி வெளியிடப்பட்டு நினைவுச் சின்னங்களும் வழங்கப்பட்டன.