Top News
| புதிய கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த அரசு தயார் நிலையில் இல்லை | | பால்மா விலை அதிகரிக்கப்பட்டுள்ளதா? வெளிவந்த உத்தியோகபூர்வ தகவல்! | | ஆலங்குளம் றஹ்மானியா வித்தியாலயத்திற்கு கிடைத்த இருமாடிக் கட்டடம் |
Aug 30, 2026

பல மாவட்டங்களில் 50 மி.மீ.க்கு மேல் மழை பதிவாகும் சாத்தியம்

Posted on February 12, 2026 by Admin | 412 Views

நாட்டின் பல மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. குறிப்பாக மத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், பொலன்னறுவை மாவட்டத்திலும் இடைக்கிடையே மழை பதிவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஊவா மாகாணத்துடன் சேர்த்து அம்பாறை, மட்டக்களப்பு, நுவரெலியா, மாத்தளை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களின் சில பகுதிகளில் 50 மில்லிமீற்றரைத் தாண்டிய ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி ஏற்படக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.

வடக்கு மாகாணம், அநுராதபுரம் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யும் வாய்ப்பு காணப்படுகிறது.

இதேவேளை நாட்டின் பிற பகுதிகளில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சப்ரகமுவ மாகாணம் மற்றும் களுத்துறை, காலி, மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் 50 மில்லிமீற்றரை மீறும் அளவில் மழைவீழ்ச்சி ஏற்படலாம் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

மேலும், மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில பகுதிகளிலும் அதிகாலை நேரங்களில் பனிமூட்டமான நிலை காணப்படலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசுவதற்கும் மின்னல் தாக்கங்கள் ஏற்படுவதற்கும் வாய்ப்பு உள்ளதால், பொதுமக்கள் அவதானத்துடன் இருந்து தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.