Top News
| அட்டாளைச்சேனை கூட்டத்தில் ஊடகவியலாளர்களை விரட்டி ஜனநாயகத்தை குழிதோண்டிப் புதைத்த ஆதம்பாவா எம்பி | | தேசிய உற்பத்தித்திறன் பாராட்டு விருது பெற்று அட்டாளைச்சேனைக்கு பெருமை சேர்த்த ஸஹ்ரா வித்தியாலயம் | | அட்டாளைச்சேனை கிழக்கிலங்கை அறபுக் கல்லூரியில் 2027 ஆம் ஆண்டுக்கான புதிய மாணவர் அனுமதிக்கான விண்ணப்பம் கோரல் |
Oct 15, 2026

பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிப்பு

Posted on February 13, 2026 by Admin | 365 Views

2026 ஆம் ஆண்டுக்கான பாடசாலைகளின் முதலாம் தவணையின் முதல் கட்டம் இன்று (13) நிறைவடைந்தது.

அரசுப் பாடசாலைகள் மற்றும் அரசின் அனுசரணையுடன் செயல்படும் தனியார் பாடசாலைகளுக்கு இன்று முதல் மார்ச் 2ஆம் திகது வரை விடுமுறை வழங்கப்படுவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

முதலாம் தவணையின் இரண்டாம் கட்டக் கல்வி நடவடிக்கைகள் மார்ச் 3ஆம் திகதி மீண்டும் ஆரம்பமாகும் என்றும் அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த இரண்டாம் கட்டப் பாடசாலைச் செயல்பாடுகள் ஏப்ரல் 10ஆம் திகதி வரை முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளன.

இந்நிலையில், 2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தர (O/L) பரீட்சைகள் வரும் 17ஆம் திகதி செவ்வாய்க்கிழமை தொடங்கவுள்ளன. பரீட்சைகள் பெப்ரவரி 17 முதல் 26ஆம் திகதி வரை நடைபெறவுள்ளன.

நாடளாவிய ரீதியில் 3,545 பரீட்சை நிலையங்களில் இப்பரீட்சைகளை நடத்த பரீட்சைகள் திணைக்களம் தேவையான ஏற்பாடுகளை செய்துள்ளது.

மேலும் பரீட்சையை முன்னிட்டு அனைத்து மேலதிக வகுப்புகள், கருத்தரங்குகள் மற்றும் செயலமர்வுகள் நடத்துவதற்கு கடந்த 11ஆம் திகதி நள்ளிரவு முதல் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.