Top News
| புதிய கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த அரசு தயார் நிலையில் இல்லை | | பால்மா விலை அதிகரிக்கப்பட்டுள்ளதா? வெளிவந்த உத்தியோகபூர்வ தகவல்! | | ஆலங்குளம் றஹ்மானியா வித்தியாலயத்திற்கு கிடைத்த இருமாடிக் கட்டடம் |
Sep 1, 2026

அக்கரைப்பற்று தாறுல் ஹக் ஹிப்ழுல் குர்ஆன் மத்ரஸாவின் ஹாபிழ்கள் கௌரவிப்பு

Posted on February 16, 2026 by Admin | 393 Views

(அக்கரைப்பற்று செய்தியாளர்)

“எழுச்சி பெறும் தாறுல் ஹக்” எனும் தொனிப்பொருளில் அக்கரைப்பற்று தாறுல் ஹக் ஹிப்ழுல் குர்ஆன் மத்ரஸாவின் ஹிப்ழுல் குர்ஆன் தமாம் நிகழ்வும் ஹாபிழ்கள் கௌரவிப்பு விழாவும் மத்ரஸாவின் தலைவர் ஓய்வு பெற்ற மேலதிக நீர்ப்பாசன பணிப்பாளர் நாயகம் அல்ஹாஜ். பொறியியலாளர். எஸ்.எல். முஹம்மட் அலியார் அவர்களின் தலைமையில் 2026.02.15ம் திகதி அக்கரைப்பற்று ஹல்லாஜ் மண்டபத்தில் நடைபெற்றது.

நிகழ்வின் போது ஹாபிழ்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் நினைவுச் சின்னங்கள் வழங்கப்பட்டதுடன் சமூக முன்னேற்றத்தில் ஹாபிழ்களின் பங்களிப்புகளும் வலியுறுத்தப்பட்டன.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக தேசிய காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவரும் அக்கரைப்பற்று மாநகர சபையின் முதல்வருமான அல்ஹாஜ் ஏ.எல்.எம். அதாஉல்லாஹ், கௌரவ அதிதிகளான அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதித் தேசிய அமைப்பாளருமான எம்.எஸ். உதுமாலெப்பை, அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் திரு. சிந்தக்க அபேவிக்கிரம, உலமாக்கள் மற்றும் முக்கியஸ்தர்களும், பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.