Top News
| மருதமுனையில் கோர விபத்து:அரச உத்தியோகத்தர் சம்பவ இடத்திலேயே பலி | | உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் அதிரடி மாற்றங்கள் | | அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு பைத்துல் ஹிக்மா நிறுவனத்தின் மகத்தான கௌரவம் |
Jul 16, 2026

நள்ளிரவு முதல் எரிபொருள் விலை உயர்வு 

Posted on February 28, 2026 by Admin | 367 Views

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

அறிவிப்பின் படி லங்கா டீசல் லிட்டருக்கு 4 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு 281 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், லங்கா சுப்பர் டீசல் 6 ரூபாயால் உயர்த்தப்பட்டு 329 ரூபாயாக விற்பனை செய்யப்படவுள்ளது.

ஒக்டேன் 92 ரக பெட்ரோல் லிட்டருக்கு 1 ரூபாய் அதிகரிக்கப்பட்டு புதிய விலை 293 ரூபாயாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் ஒக்டேன் 95 ரக பெட்ரோல் மற்றும் மண்ணெண்ணெய் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. அவை முறையே 340 ரூபாய் மற்றும் 182 ரூபாய் என்ற நிலையான விலையிலேயே தொடர்ந்தும் விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.