Top News
| அம்பாறை மாவட்ட வீதி அபிவிருத்திக்கு ரூபா 4,066 மில்லியன் ஒதுக்கீடு | | சுற்றுலாப் பணியக நிதி மோசடி: முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவை கைது செய்ய பிடியாணை | | மு.கா.வின் 40ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ‘லீடர் அஷ்ரப் கிண்ண’ மென்பந்து கிரிக்கெட் சமர் |
Oct 15, 2026

இலங்கையில் தங்கத்தின் விலை ஒரே நாளில் கடும் சரிவு 

Posted on March 4, 2026 by Admin | 401 Views

உலக சந்தையில் தங்கத்தின் விலை குறைந்துள்ளதன் தாக்கம் இலங்கை உள்நாட்டு சந்தையிலும் பிரதிபலித்துள்ளது. அதன்படி, நாட்டில் தங்கத்தின் விலை கணிசமாக சரிந்துள்ளதாக தங்க சந்தை தரவுகள் உறுதிப்படுத்துகின்றன.

இன்று (04) காலை கொழும்பு செட்டியார்தெரு தங்க சந்தையில் 22 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 376,500 ரூபாவாகப் பதிவாகியுள்ளது. நேற்று (03) இதன் விலை 388,500 ரூபாவாக இருந்த நிலையில் ஒரே நாளில் 12,000 ரூபாவிற்கும் மேல் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அதேபோன்று 24 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலையும் சரிவை கண்டுள்ளது. நேற்று 420,000 ரூபாவாக விற்பனையானது. இன்று 407,000 ரூபாவாக குறைந்துள்ளதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.