Top News
| அட்டாளைச்சேனை கிழக்கிலங்கை அறபுக் கல்லூரியில் 2027 ஆம் ஆண்டுக்கான புதிய மாணவர் அனுமதிக்கான விண்ணப்பம் கோரல் | | பாலமுனை தாருல் ஹஸனாத் வித்தியாலய வடிகான் நிர்மாணத்துக்கு நிதி ஒதுக்கீடு | | அம்பாறை மாவட்ட வீதி அபிவிருத்திக்கு ரூபா 4,066 மில்லியன் ஒதுக்கீடு |
Oct 15, 2026

சீனா இராணுவ செலவை 275 பில்லியன் டொலராக உயர்த்தியது

Posted on March 5, 2026 by Admin | 306 Views

சீனா தனது இராணுவ செலவினத்தை 275 பில்லியன் அமெரிக்க டொலராக (இலங்கை ரூபாயில் சுமார் 85 லட்சம் கோடி) உயர்த்தியுள்ளது.

கடந்த ஆண்டின் வரவு-செலவுத் திட்டத்தை விட 2.5 பில்லியன் டொலர் அதிகமாக இந்த ஆண்டிற்கான ஒதுக்கீடு சீனாவின் தேசிய மக்கள் காங்கிரஸில் சமர்ப்பிக்கப்பட்ட புதிய வரவு-செலவுத் திட்டத்தில் இடம்பெற்றுள்ளது. அந்த பட்ஜெட்டை சீன பிரதமர் லி கியாங் தாக்கல் செய்தார்.

உலகளவில் அதிகரித்து வரும் பாதுகாப்பு மற்றும் போர் பதற்றங்களின் பின்னணியில் சீனா தனது இராணுவ செலவினத்தை உயர்த்தியிருப்பது கவனம் பெற்றுள்ளது.

படைத் தளபாடங்களை நவீனப்படுத்துதல், புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துதல் மற்றும் பாதுகாப்பு திறனை வலுப்படுத்துதல் போன்ற நடவடிக்கைகளுக்காக கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உலகளவில் இராணுவ செலவினத்தில் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக அதிக தொகை செலவிடும் நாடாக சீனா தொடர்ந்து இருந்து வருகிறது.

மேலும் 2024ஆம் ஆண்டில் சீனா தனது இராணுவ செலவினத்தை முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 7.2 சதவீதம் அதிகரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.