Top News
| மருதமுனையில் கோர விபத்து:அரச உத்தியோகத்தர் சம்பவ இடத்திலேயே பலி | | உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் அதிரடி மாற்றங்கள் | | அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு பைத்துல் ஹிக்மா நிறுவனத்தின் மகத்தான கௌரவம் |
Jul 16, 2026

இலங்கையில் சர்ரென உயர்ந்த எரிபொருள் விலை 

Posted on March 10, 2026 by Admin | 303 Views

2025.03.09 நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலைகளை திருத்துவதற்கு இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது.

அதன்படி 92 ரக ஒக்டேன் பெற்றோல் லீற்றரின் விலை 24 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் 293 ரூபாவாக இருந்த விலை தற்போது 317 ரூபாவாக உயர்ந்துள்ளது.

மேலும் 95 ரக ஒக்டேன் பெற்றோல் லீற்றரின் விலை 25 ரூபாவால் உயர்த்தப்பட்டுள்ளது. இதன் முந்தைய விலை 340 ரூபாவாக இருந்த நிலையில் புதிய விலை 365 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் ஓட்டோ டீசல் லீற்றரின் விலை 22 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. 281 ரூபாவாக இருந்த விலை தற்போது 303 ரூபாவாக உயர்ந்துள்ளது.

லங்கா சுப்பர் டீசல் 4 ஸ்டார் யூரோ 4 லீற்றரின் விலை 24 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் 329 ரூபாவாக இருந்த விலை தற்போது 353 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும் மண்ணெண்ணெய் ஒரு லீற்றரின் விலை 13 ரூபாவால் உயர்த்தப்பட்டுள்ளதுடன் புதிய விலை 195 ரூபாவாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மேற்கொண்ட இந்த விலை திருத்தத்துக்கு இணையாக ஐ.ஓ.சி நிறுவனமும் தமது எரிபொருள் விலைகளை திருத்தம் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.