Top News
| அட்டாளைச்சேனை கூட்டத்தில் ஊடகவியலாளர்களை விரட்டி ஜனநாயகத்தை குழிதோண்டிப் புதைத்த ஆதம்பாவா எம்பி | | தேசிய உற்பத்தித்திறன் பாராட்டு விருது பெற்று அட்டாளைச்சேனைக்கு பெருமை சேர்த்த ஸஹ்ரா வித்தியாலயம் | | அட்டாளைச்சேனை கிழக்கிலங்கை அறபுக் கல்லூரியில் 2027 ஆம் ஆண்டுக்கான புதிய மாணவர் அனுமதிக்கான விண்ணப்பம் கோரல் |
Oct 15, 2026

அஸ்வெசும பயனாளிகளுக்கான அறிவிப்பு

Posted on March 11, 2026 by Admin | 432 Views

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் முதலாம் கட்டப் பயனாளிகளுக்கான மார்ச் மாதக் கொடுப்பனவு நாளை (12) முதல் அவர்களது வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.

அந்த அறிவிப்பின்படி நாடு முழுவதும் 1,408,635 குடும்பங்களுக்கு இந்த நலத்திட்டக் கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது. இதற்காக மொத்தமாக 11,179,801,250 ரூபாவிற்கும் அதிகமான தொகை அரசால் ஒதுக்கப்பட்டு பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக வரவு வைக்கப்பட உள்ளது.

மேலும், அஸ்வெசும திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்காகவும் நாளை (12) 2,350,530,000 ரூபாவிற்கும் அதிகமான தொகை வங்கிக் கணக்குகளில் வைப்பு செய்யப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.