Top News
| அட்டாளைச்சேனை கூட்டத்தில் ஊடகவியலாளர்களை விரட்டி ஜனநாயகத்தை குழிதோண்டிப் புதைத்த ஆதம்பாவா எம்பி | | தேசிய உற்பத்தித்திறன் பாராட்டு விருது பெற்று அட்டாளைச்சேனைக்கு பெருமை சேர்த்த ஸஹ்ரா வித்தியாலயம் | | அட்டாளைச்சேனை கிழக்கிலங்கை அறபுக் கல்லூரியில் 2027 ஆம் ஆண்டுக்கான புதிய மாணவர் அனுமதிக்கான விண்ணப்பம் கோரல் |
Oct 15, 2026

காலி தேசிய வைத்தியசாலையில் உள்ள ஈரானிய கடற்படையினரின் சடலங்கள் தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

Posted on March 11, 2026 by Admin | 339 Views

காலி தேசிய வைத்தியசாலையில் பாதுகாக்கப்பட்டிருந்த 84 ஈரானிய கடற்படையினரின் சடலங்களை ஈரானிய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்குமாறு காலி பிரதம நீதவான் சமீர தொடங்கொட இன்று (11) முற்பகல் உத்தரவிட்டுள்ளார்.

காலி தேசிய வைத்தியசாலையின் இரண்டு நடமாடும் குளிரூட்டிகளில் வைக்கப்பட்டிருந்த இந்த சடலங்களை ஒப்படைக்கும் நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு வைத்தியசாலைப் பணிப்பாளருக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

காலி துறைமுகப் பொலிஸாரால் காலி பிரதம நீதவான் நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை பரிசீலித்த பின்னர் நீதவான் சமீர தொடங்கொட இந்த உத்தரவை பிறப்பித்ததாக தெரிவிக்கப்படுகிறது.