Top News
| ஒவ்வொரு புதன்கிழமையும் அரச விடுமுறை -அரசின் அதிரடி அறிவிப்பு | | QR முறைமை அறிமுகப்படுத்தப்பட்டமைக்கான உண்மையான காரணம் | | இன்று முதல் QR இல்லாமல் எரிபொருள் இல்லை |
Mar 17, 2026

எழுத்தாளர் முனையூர் இ.மு.ஜி.பாவின் சிறுகதைத் தொகுதி வெளியீட்டு விழா

Posted on March 11, 2026 by Admin | 97 Views

(அட்டாளைச்சேனை செய்தியாளர்)

முனையூர் இ.மு ஜி பா வின் சிறுகதைத் தொகுதி வெளியீட்டு நிகழ்வு பாவலர் பாலமுனை பாறூக் அவர்களின் தலைமையில் அண்மையில் பாலமுனை அல்-ஹிதாயா மகளிர் கல்லூரி அரங்கத்தில் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதித் தேசிய அமைப்பாளருமான எம்.எஸ். உதுமாலெப்பை, அட்டாளைச்சேனை பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் ஏ.எஸ்.எம். உவைஸ், சம்மாந்துறை பிரதேச செயலாளர் ஏ.எல். ஹனீபா, ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாலமுனை அமைப்பாளர் அலியார் மற்றும் முக்கிய பிரமுகர்கள் மற்றும் எழுத்தாளர்களும் கலந்து கொண்டனர்.

நிகழ்வின் போது நூலாசிரியரின் இலக்கியப் பங்களிப்பு குறித்து பாராட்டுரைகள் இடம்பெற்றதுடன் சிறுகதைத் தொகுதி வெளியிடப்பட்டு நினைவுச் சின்னங்களும் வழங்கப்பட்டன.