Top News
| மருதமுனையில் கோர விபத்து:அரச உத்தியோகத்தர் சம்பவ இடத்திலேயே பலி | | உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் அதிரடி மாற்றங்கள் | | அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு பைத்துல் ஹிக்மா நிறுவனத்தின் மகத்தான கௌரவம் |
Jul 16, 2026

இலங்கையில் ஒரு லீற்றர் பெற்றோலின் விலை 400 ரூபாவை தாண்டியது

Posted on March 21, 2026 by Admin | 234 Views

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளை உயர்த்தியுள்ளது.

லங்கா பெற்றோல் 92 ஒக்டேன் ஒரு லீற்றரின் விலை ரூ. 317.00 இலிருந்து ரூ. 81.00 அதிகரித்து ரூ. 398.00 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும் லங்கா பெற்றோல் 95 ஒக்டேன் யூரோ 4 ஒரு லீற்றரின் விலை ரூ. 365.00 இலிருந்து ரூ. 90.00 உயர்ந்து ரூ. 455.00 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

லங்கா ஒட்டோ டீசல் ஒரு லீற்றரின் விலை ரூ. 303.00 இலிருந்து ரூ. 79.00 அதிகரித்து ரூ. 382.00 ஆகவும், லங்கா சுப்பர் டீசல் 4 ஸ்டார் யூரோ 4 ஒரு லீற்றரின் விலை ரூ. 353.00 இலிருந்து ரூ. 90.00 உயர்ந்து ரூ. 443.00 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை லங்கா மண்ணெண்ணெய் ஒரு லீற்றரின் விலை ரூ. 195.00 இலிருந்து ரூ. 60.00 உயர்ந்து ரூ. 255.00 ஆக மாற்றப்பட்டுள்ளது.

இந்த புதிய விலைகள் நாடு முழுவதும் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.