Top News
| மருதமுனையில் கோர விபத்து:அரச உத்தியோகத்தர் சம்பவ இடத்திலேயே பலி | | உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் அதிரடி மாற்றங்கள் | | அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு பைத்துல் ஹிக்மா நிறுவனத்தின் மகத்தான கௌரவம் |
Jul 16, 2026

36 வருட அனுபவம் கொண்ட ஆர்.எம். நழீல் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் செயலாளராக கடமையேற்பு

Posted on March 24, 2026 by Admin | 284 Views

அட்டாளைச்சேனை பிரதேச சபையின் புதிய செயலாளராக ஆர்.எம். நழீல் அவர்கள் இன்று உத்தியோகபூர்வமாகப் கடமைகளை பொறுப்பேற்றார்.

முகாமைத்துவ சேவையின் அதிவிசேட தரத்தைச் சேர்ந்த அனுபவமிக்க நிர்வாக அதிகாரியும் 36 ஆண்டுகளுக்கும் மேலாக அரச பணிச்சேவையில் ஈடுபட்டு வரும் இவர் அட்டாளைச்சேனை, லாகுகல, அக்கரைப்பற்று மற்றும் பொத்துவில் ஆகிய பிரதேச செயலகங்களில் நிர்வாக மற்றும் முகாமைத்துவ சேவை உத்தியோகத்தராக பணியாற்றி தனது திறமையான நிர்வாகத்தாலும் மக்களுடன் கொண்ட நெருக்கத்தாலும் வளர்ச்சியை எட்டியுள்ளார்.

தனது கடமைகளை பொறுப்பேற்கும் இன்றைய நிகழ்வில் அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் அஹமட் அப்கர் கலந்து கொண்டு புதிய செயலாளருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார்.