Top News
| அம்பாறை மாவட்ட அபிவிருத்திப் பணிகள் குறித்து விசேட ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் தீவிர ஆராய்வு | | புதிய கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த அரசு தயார் நிலையில் இல்லை | | பால்மா விலை அதிகரிக்கப்பட்டுள்ளதா? வெளிவந்த உத்தியோகபூர்வ தகவல்! |
Sep 1, 2026

அமெரிக்காவின் நிபந்தனைப் பட்டியலை ஈரானிடம் கொண்டு சேர்த்த பாகிஸ்தான்

Posted on March 25, 2026 by Admin | 283 Views

அமெரிக்கா முன்வைத்துள்ள போர்நிறுத்தக் கோரிக்கைகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய நிபந்தனைகள் அடங்கிய உத்தியோகபூர்வ ஆவணம் ஒன்று பாகிஸ்தான் வழியாக ஈரானிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகமான அல் ஜசீரா தெரிவித்துள்ளது.

இந்த ஆவணம் ட்ரம்ப் நிர்வாகத்தினால் பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டதாகவும் அதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் அதிகாரிகள் ஈரானிய தரப்பிற்கு அதிகாரப்பூர்வமாக சமர்ப்பித்துள்ளதாகவும் அல் ஜசீரா உறுதிப்படுத்தியுள்ளது.

இக்கோரிக்கைகள் தொடர்பாக ஈரான் தனது பதிலை வழங்குவதற்காக பாகிஸ்தான் தற்போது காத்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்கா–ஈரான் இடையிலான நீடித்துவரும் பதற்றநிலையைத் தணிக்கும் நோக்கில் பாகிஸ்தான் மத்தியஸ்தராக செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் இவ்விவகாரத்தை முன்னெடுத்து செல்லும் வகையில் அமெரிக்க மற்றும் ஈரானிய அதிகாரிகள் இடையிலான நேரடி சந்திப்பு ஒன்று விரைவில் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடைபெறக்கூடும் எனவும் தகவல்கள் சுட்டிக்காட்டுகின்றன.