Top News
| அம்பாறை மாவட்ட அபிவிருத்திப் பணிகள் குறித்து விசேட ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் தீவிர ஆராய்வு | | புதிய கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த அரசு தயார் நிலையில் இல்லை | | பால்மா விலை அதிகரிக்கப்பட்டுள்ளதா? வெளிவந்த உத்தியோகபூர்வ தகவல்! |
Sep 2, 2026

காலி ரயில் நிலையத்தில் பற்றி எரியும் ரயில் பெட்டிகள்

Posted on March 31, 2026 by Admin | 167 Views

காலி ரயில் நிலையத்திற்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பயன்பாட்டிலிருந்து நீக்கப்பட்ட ரயில் பெட்டிகளில் திடீரென தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

அங்கு வைக்கப்பட்டிருந்த நான்கு பழைய ரயில் பெட்டிகளில் இரண்டு பெட்டிகள் தீப்பற்றி எரிந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் குறித்து தகவல் கிடைத்தவுடன் தீயணைப்புப் படையினர் விரைந்து சம்பவ இடத்திற்கு சென்று தீயை கட்டுப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த தீ விபத்தால் உயிர்சேதமோ காயமோ எதுவும் பதிவாகவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.