Top News
| அட்டாளைச்சேனை கூட்டத்தில் ஊடகவியலாளர்களை விரட்டி ஜனநாயகத்தை குழிதோண்டிப் புதைத்த ஆதம்பாவா எம்பி | | தேசிய உற்பத்தித்திறன் பாராட்டு விருது பெற்று அட்டாளைச்சேனைக்கு பெருமை சேர்த்த ஸஹ்ரா வித்தியாலயம் | | அட்டாளைச்சேனை கிழக்கிலங்கை அறபுக் கல்லூரியில் 2027 ஆம் ஆண்டுக்கான புதிய மாணவர் அனுமதிக்கான விண்ணப்பம் கோரல் |
Oct 15, 2026

பாகிஸ்தானிலிருந்து ஈரான் உடன்பாடின்றி வெளியேறியது

Posted on April 12, 2026 by Admin | 320 Views

இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற அமெரிக்கா–ஈரான் பேச்சுவார்த்தைகள் எந்தவித உடன்பாடும் எட்டப்படாமல் முடிவடைந்துள்ள நிலையில் இரு தரப்பும் பாகிஸ்தானிலிருந்து வெளியேறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் Mohammad Baqer Qalibaf மற்றும் வெளியுறவு அமைச்சர் Abbas Araghchi உள்ளிட்ட உயர்மட்ட தூதுக்குழு பாகிஸ்தானை விட்டு புறப்பட்டதாக ஈரானிய “மெஹர்” (Mehr) செய்தி நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.

முன்னதாக வாஷிங்டனின் கோரிக்கைகளை ஈரான் நிராகரித்துள்ளதாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அமெரிக்க துணை ஜனாதிபதி JD Vance இஸ்லாமாபாத்திலிருந்து புறப்பட்டிருந்தார்.

இதனைத் தொடர்ந்து ஈரானிய பிரதிநிதி குழுவும் வெளியேறியதன் மூலம் பேச்சுவார்த்தைகள் முடிவுக்கு வந்துள்ளன.

இரு நாடுகளுக்கிடையிலான முக்கியமான முரண்பாடுகள் காரணமாக எந்தவித இணக்கப்பாடும் எட்டப்படவில்லை என்பது தற்போது உறுதியாகியுள்ளது.

இதனால் அமெரிக்கா–ஈரான் இடையிலான அரசியல் பதற்றம் மேலும் அதிகரிக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது.