Top News
| அட்டாளைச்சேனை கூட்டத்தில் ஊடகவியலாளர்களை விரட்டி ஜனநாயகத்தை குழிதோண்டிப் புதைத்த ஆதம்பாவா எம்பி | | தேசிய உற்பத்தித்திறன் பாராட்டு விருது பெற்று அட்டாளைச்சேனைக்கு பெருமை சேர்த்த ஸஹ்ரா வித்தியாலயம் | | அட்டாளைச்சேனை கிழக்கிலங்கை அறபுக் கல்லூரியில் 2027 ஆம் ஆண்டுக்கான புதிய மாணவர் அனுமதிக்கான விண்ணப்பம் கோரல் |
Oct 15, 2026

சுற்றுலா செல்பவர்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி

Posted on April 12, 2026 by Admin | 334 Views

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு காலத்தில் சமூக ஊடகப் பயன்பாட்டில் பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் செயல்பட வேண்டும் என பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

விடுமுறை காலத்தில் மேற்கொள்ளும் பயணங்களின் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை உடனுக்குடன் சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்வதைத் தவிர்க்குமாறு அவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

இவ்வாறு தகவல்களை நேரடியாக பகிர்வது, வீட்டில் யாரும் இல்லாத நிலையை வெளிப்படுத்தி திருடர்களுக்கு வாய்ப்பாக அமையக்கூடும் எனவும் பொலிஸார் எச்சரித்துள்ளனர்.

எனவே சுற்றுலா மற்றும் விடுமுறை அனுபவங்களை பயணம் முடிந்து வீடு திரும்பிய பின்னரே சமூக ஊடகங்களில் பகிர வேண்டும் எனவும் பொதுமக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.