Top News
| அட்டாளைச்சேனை கூட்டத்தில் ஊடகவியலாளர்களை விரட்டி ஜனநாயகத்தை குழிதோண்டிப் புதைத்த ஆதம்பாவா எம்பி | | தேசிய உற்பத்தித்திறன் பாராட்டு விருது பெற்று அட்டாளைச்சேனைக்கு பெருமை சேர்த்த ஸஹ்ரா வித்தியாலயம் | | அட்டாளைச்சேனை கிழக்கிலங்கை அறபுக் கல்லூரியில் 2027 ஆம் ஆண்டுக்கான புதிய மாணவர் அனுமதிக்கான விண்ணப்பம் கோரல் |
Oct 15, 2026

முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்ட செயற்குழு தெரிவு

Posted on April 17, 2026 by Admin | 312 Views

(ஏறாவூர் செய்தியாளர்)

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் (SLMC) கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட செயற்குழு தெரிவு கூட்டம் கட்சியின் தேசிய தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அல்ஹாஜ் ரவூப் ஹகீம் தலைமையில் இன்று (17 ஏப்ரல் 2026) ஏறாவூரில் நடைபெற்றது.

இக் கூட்டத்தில் இடைக்கால மாவட்ட செயற்குழுவுக்கான ஐந்து பேர் கொண்ட குழு தேர்ந்தெடுக்கப்பட்டது. அதன்படி கட்சியின் பிரதித் தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தலைவராக நியமிக்கப்பட்டார். செயலாளராக தபாலதிபரும் கட்சியின் உயர் பீட உறுப்பினருமான ஏ. நசீர் தெரிவானார். பொருளாளராக முன்னாள் ஓட்டமாவடி பிரதேச சபைத் தலைவர் எம்.எச்.எம். பைரூஸ் பொறுப்பேற்றார்.

மேலும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஏறாவூர் நகர பிதாவுமான அல்ஹாஜ் எம்.எஸ். நளீம் பிரதித் தலைவராகவும், கல்குடா தொகுதி அமைப்பாளரும் உயர் பீட உறுப்பினருமான சட்டத்தரணி ஹபீப் ரிபான் உப தலைவராகவும் நியமிக்கப்பட்டனர்.

இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதித் தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், கட்சியின் பிரதித் தேசிய அமைப்பாளரும் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எஸ்.உதுமாலெப்பை, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஏறாவூர் நகர பிதா அல்ஹாஜ் எம்.எஸ்.நளீம், கட்சியின் கல்குடா தொகுதி அமைப்பாளரும், உயர் பீட உறுப்பினருமான சட்டத்தரணி ஹபீப் ரிபான், முன்னாள் ஓட்டமாவடி பிரதேச சபையின் தவிசாளர் எம்.எச்.எம்.பைரூஸ், கட்சியின் அம்பாறை மாவட்ட செயலாளர் ஏ.சி.சமால்தீன் , மட்டக்களப்பு மாவட்ட பிரதேச உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், கட்சியின் பிரதேச அமைப்பாளர்கள் மற்றும் முக்கியஸ்தர்களும் பங்கேற்றனர்.