Top News
| மருதமுனையில் கோர விபத்து:அரச உத்தியோகத்தர் சம்பவ இடத்திலேயே பலி | | உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் அதிரடி மாற்றங்கள் | | அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு பைத்துல் ஹிக்மா நிறுவனத்தின் மகத்தான கௌரவம் |
Jul 16, 2026

கச்சா எண்ணெய் கப்பல் இன்று இலங்கைக்கு வருகை

Posted on April 17, 2026 by Admin | 201 Views

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள போர் நிலைமைகளின் பின்னணியில் கச்சா எண்ணெய் ஏற்றிய முதல் கப்பல் இன்று (17) இலங்கையை வந்தடையவுள்ளதாக இலங்கை பெற்றோலிய மொத்த களஞ்சிய முனைய நிறுவனம் அறிவித்துள்ளது.

இக் கப்பல் மூலம் சுமார் 97,500 மெட்ரிக் தொன் கச்சா எண்ணெய் நாட்டிற்கு கொண்டு வரப்படுவதாக அதன் முகாமைப் பணிப்பாளர் கலாநிதி மயூர நெத்திகுமாரகே தெரிவித்துள்ளார்.

இதனுடன் அமெரிக்காவிலிருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ள மேலும் ஒரு எரிபொருள் கப்பல் நேற்று (16) தனது பயணத்தை ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.