Top News
| அட்டாளைச்சேனை கூட்டத்தில் ஊடகவியலாளர்களை விரட்டி ஜனநாயகத்தை குழிதோண்டிப் புதைத்த ஆதம்பாவா எம்பி | | தேசிய உற்பத்தித்திறன் பாராட்டு விருது பெற்று அட்டாளைச்சேனைக்கு பெருமை சேர்த்த ஸஹ்ரா வித்தியாலயம் | | அட்டாளைச்சேனை கிழக்கிலங்கை அறபுக் கல்லூரியில் 2027 ஆம் ஆண்டுக்கான புதிய மாணவர் அனுமதிக்கான விண்ணப்பம் கோரல் |
Oct 15, 2026

மசகு எண்ணெய் மற்றும் எரிவாயு விலைகளில் சடுதியாக வீழ்ச்சி

Posted on April 22, 2026 by Admin | 222 Views

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தொடரும் கடுமையான போர் பதற்றங்களுக்கிடையிலும் உலகளாவிய எரிசக்தி சந்தையில் இன்று (22) மசகு எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு விலைகள் மேலும் குறைந்துள்ளன.

சர்வதேச சந்தை தரவுகளின்படி WTI (West Texas Intermediate) வகை மசகு எண்ணெயின் ஒரு பீப்பாய் விலை 89.39 அமெரிக்க டொலராக சரிந்துள்ளது. அதே சமயம் உலகளவில் பரவலாக பயன்படுத்தப்படும் பிரெண்ட் (Brent) வகை மசகு எண்ணெய் ஒரு பீப்பாய் விலை 98.32 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.

இதே போன்று இயற்கை எரிவாயு விலைகளிலும் இன்று குறைவு காணப்பட்டுள்ளது. சந்தை தகவல்களின் அடிப்படையில் அதன் விலை 2.68 அமெரிக்க டொலராக தாழ்ந்துள்ளது.

பொதுவாக மத்திய கிழக்கில் நிலவும் பதற்றமான சூழ்நிலைகள் எரிசக்தி விலைகளை உயர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகின்றன. எனினும் உலகளாவிய பொருளாதார மந்தநிலை, தேவையில் ஏற்பட்ட குறைவு மற்றும் எரிசக்தி கையிருப்பு அதிகரிப்பு போன்ற காரணிகள் இந்த விலை சரிவுக்கு காரணமாக உள்ளதாக பொருளாதார நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.