Top News
| சவூதியில் கைதான ஜம்இய்யதுல் உலமா சபை செயலாளர் இலங்கை திரும்பினார் | | திருக்கோவிலில் அட்டாளைச்சேனை சோபர் அணி சாதனை | | மரணத்துடன் போராடும் 9 வயது சிறுமி- உங்களால் முடிந்த நிதி உதவியை வழங்குங்கள் |
Jun 1, 2026

ஈரான் மீதான தாக்குதல் தற்காலிகமாக நிறுத்தம்

Posted on April 22, 2026 by Admin | 109 Views

ஈரான் அரசியல் சூழல் தற்போது பிளவுபட்ட நிலையில் காணப்படுவதால் அந்த நாட்டின் மீது மேற்கொள்ளப்பட்டிருந்த இராணுவத் தாக்குதலை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதுடன் போர்நிறுத்த ஒப்பந்தத்தை நீடிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

இந்த தீர்மானம் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மற்றும் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் ஆசிம் முனீர் ஆகியோர் விடுத்த கோரிக்கையைத் தொடர்ந்து எடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார். ஈரானிய தலைவர்கள் ஒன்றிணைந்து ஒருமித்த நிலைப்பாட்டை முன்வைக்கும் வரை காத்திருக்குமாறு அவர்கள் கேட்டுக் கொண்டதாகவும் கூறியுள்ளார்.

ட்ரூத் சோசியல் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ஈரான் அரசு தற்போது உள்பிரிவினை நிலைமையில் உள்ளது. பாகிஸ்தான் தலைமைத்துவத்தின் வேண்டுகோளை மதித்து ஈரான் ஒருமித்த கருத்துக்கு வரும் வரை தாக்குதலை இடைநிறுத்த முடிவு செய்துள்ளோம். இருப்பினும் ஈரான் மீது இராணுவ முற்றுகை எந்த நேரத்தலும் தொடரும் வகையில் அமெரிக்க படைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது,” என ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

ஈரான் தனது முன்மொழிவை சமர்ப்பித்து, அதனைச் சுற்றிய பேச்சுவார்த்தைகள் நிறைவடையும் வரை போர்நிறுத்தம் அமலில் இருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். அதேவேளை தேவையான எந்த நேரத்திலும் தாக்குதலுக்கு அமெரிக்க இராணுவம் தயாராக இருக்கும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்த அறிவிப்பின் மூலம் இன்று நள்ளிரவுடன் முடிவடையவிருந்த போர்நிறுத்தம் மேலும் சில நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் மத்திய கிழக்கில் நிலவி வந்த போர் பதற்றம் தற்காலிகமாக தணியும் என எதிர்பார்க்கப்படுகிறது.