Top News
| சுற்றுலாப் பணியக நிதி மோசடி: முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவை கைது செய்ய பிடியாணை | | மு.கா.வின் 40ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ‘லீடர் அஷ்ரப் கிண்ண’ மென்பந்து கிரிக்கெட் சமர் | | மட்டக்களப்பு கல்லடி பாலத்திலிருந்து வாவியில் குதித்த 19 வயது யுவதி |
Oct 15, 2026

ராஜங்கனே சத்தாரதன தேரர் மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தினால் கைது

Posted on May 8, 2026 by Admin | 263 Views

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால மற்றும் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய ஆகியோருக்கு சமூக வலைதளங்கள் வழியாக அச்சுறுத்தல் விடுத்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரிலேயே இந்த கைது மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஆண்டு ராஜங்கனே சத்தாரதன தேரரை சங்க அமைப்பிலிருந்து நீக்க ஸ்ரீலங்கா ராமண்ய மகா நிகாயத்தின் செயற்குழு நடவடிக்கை எடுத்திருந்தது.

யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வந்த அவர் சமூக வலைதளங்களில் வெளியிட்ட கருத்துக்கள் தொடர்பாக முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் பின்னரே அந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.