Top News
| சுற்றுலாப் பணியக நிதி மோசடி: முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவை கைது செய்ய பிடியாணை | | மு.கா.வின் 40ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ‘லீடர் அஷ்ரப் கிண்ண’ மென்பந்து கிரிக்கெட் சமர் | | மட்டக்களப்பு கல்லடி பாலத்திலிருந்து வாவியில் குதித்த 19 வயது யுவதி |
Oct 15, 2026

அக்கரைப்பற்று கல்வி வலயத்தில் 33 பாடசாலைகளுக்கு அதிபர் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன

Posted on May 14, 2026 by Admin | 450 Views

(அக்கரைப்பற்று செய்தியாளர்)

அக்கரைப்பற்று கல்வி வலயத்திற்குட்பட்ட 33 மாகாணப் பாடசாலைகளில் நிலவும் அதிபர் வெற்றிடங்களை நிரப்புவதற்காக தகுதியான அதிபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

நீண்டகாலமாக அக்கரைப்பற்று கல்வி வலயத்தில் சில பாடசாலைகளில் நிலவிய அதிபர் வெற்றிடத்தை நிரப்பும் செயற்பாடாக இது அமைந்துள்ளது.

தேவையான கல்வித் தகுதிகளும் நிர்வாக அனுபவங்களும் கொண்ட அதிபர்கள் உரிய நடைமுறைகளின் அடிப்படையில் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். தேர்வு செய்யப்படும் அதிபர்கள் மாணவர்களின் கல்வி முன்னேற்றம், ஒழுக்கம் மற்றும் பாடசாலை அபிவிருத்தி நடவடிக்கைகளில் முக்கிய பங்காற்றுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

விண்ணப்பப் படிவங்கள் மற்றும் மேலதிக தகவல்களை அக்கரைப்பற்று கல்வி வலய அலுவலகத்திலிருந்து பெற்றுக்கொள்ள முடியும் என்றும் குறிப்பிட்ட இறுதித் திகதிக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Screenshot