Top News
| அட்டாளைச்சேனை கிழக்கிலங்கை அறபுக் கல்லூரியில் 2027 ஆம் ஆண்டுக்கான புதிய மாணவர் அனுமதிக்கான விண்ணப்பம் கோரல் | | பாலமுனை தாருல் ஹஸனாத் வித்தியாலய வடிகான் நிர்மாணத்துக்கு நிதி ஒதுக்கீடு | | அம்பாறை மாவட்ட வீதி அபிவிருத்திக்கு ரூபா 4,066 மில்லியன் ஒதுக்கீடு |
Oct 15, 2026

சவூதியில் கைதான ஜம்இய்யதுல் உலமா சபை செயலாளர் இலங்கை திரும்பினார்

Posted on May 31, 2026 by Admin | 288 Views

சவுதி அரேபியாவில் விசாரணைக்காகத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் (ACJU) பொதுச் செயலாளர் அஷ்ஷெய்க் அர்க்கம் நூராமித் இன்று காலை இலங்கை திரும்பியுள்ளார்.

புனித ஹஜ் கடமைக்காக சவுதி அரேபியா சென்றிருந்த அவர் அங்குள்ள சவுதி பிரஜாவுரிமை பெற்ற இலங்கையர் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் அந்நாட்டுப் பாதுகாப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து சவுதி அரேபியாவிலுள்ள இலங்கைத் தூதரகம் மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சு ஆகியன மேற்கொண்ட உடனடி மற்றும் தீவிர ராஜதந்திர முயற்சிகளின் பலனாக அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

அதனடிப்படையில் அஷ்ஷெய்க் அர்க்கம் நூராமித் சவுதி அரேபியாவின் ஜித்தா சர்வதேச விமான நிலையத்திலிருந்து இன்று காலை இலங்கை நோக்கி பயணமாகியுள்ளதாக அமைச்சின் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.