Top News
| மருதமுனையில் கோர விபத்து:அரச உத்தியோகத்தர் சம்பவ இடத்திலேயே பலி | | உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் அதிரடி மாற்றங்கள் | | அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு பைத்துல் ஹிக்மா நிறுவனத்தின் மகத்தான கௌரவம் |
Jul 16, 2026

அதிரடியாக உயர்ந்த எரிபொருள் விலை!பொதுமக்கள் அதிர்ச்சி

Posted on May 31, 2026 by Admin | 205 Views

நாட்டில் மீண்டும் எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் (சிபெட்கோ) அறிவித்துள்ளது. இந்த விலை திருத்தம் இன்று(30) நள்ளிரவு முதல் அமுலுக்கு வருவதாக அந்த நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய விலை திருத்தத்தின்படி, அனைத்து வகையான எரிபொருட்களின் விலைகளும் கணிசமான அளவு உயர்த்தப்பட்டுள்ளன.

மாற்றமடைந்துள்ள புதிய விலை விபரங்கள் வருமாறு:

ஒக்டேன் 92 ரக பெட்ரோல்: ஒரு லீற்றரின் விலை 24 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு, அதன் புதிய விலை 434 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஒக்டேன் 95 ரக பெட்ரோல்: ஒரு லீற்றரின் விலை 25 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு, புதிய விலை 495 ரூபாயாக விற்பனை செய்யப்படவுள்ளது.

ஒட்டோ டீசல்: ஒரு லீற்றரின் விலை 15 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு, புதிய விலை 407 ரூபாயாகும்.

லங்கா சுப்பர் டீசல்: ஒரு லீற்றரின் விலை 20 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு, புதிய விலை 478 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

மண்ணெண்ணெய்: சாதாரண பொதுமக்களின் பயன்பாட்டுக்கான மண்ணெண்ணெய் ஒரு லீற்றரின் விலை 20 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு, அதன் புதிய விலை 285 ரூபாயாக விற்பனை செய்யப்படவுள்ளது