(அட்டாளைச்சேனை செய்தியாளர்- சஹிர்)
மாலைப் பொழுதில் சக பிள்ளைகளுடன் ஓடித் திரிந்து விளையாட வேண்டிய ஒன்பது வயதுச் சிறுமி ஒருத்தி இன்று மருத்துவமனைப் படுக்கையில் மரணத்தோடு போராடிக் கொண்டிருக்கிறாள். கொழும்பு லேடி ரிட்ஜ்வே (LRH) மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அச்சிறுமியின் நிலைமை நாளுக்கு நாள் மோசமடைந்து வருவதாக மருத்துவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
அவளது உடலை வாட்டி வதைக்கும் கொடிய நோய்களான Primary HLH மற்றும் Febrile Neutropenia (கடுமையான நிலை) ஆகியவற்றுக்கு எதிராக அந்தப் பிஞ்சு உள்ளம் போராடி வருகிறது. நோயின் தீவிரம் காரணமாக அவளுக்கு மிக அவசரமாக உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையும் (Organ Transplant) அதனுடன் இணைந்த முக்கிய மருத்துவப் பரிசோதனைகளும் செய்யப்பட வேண்டியுள்ளது.
மகளின் நிலையைப் பார்த்து நெஞ்சு உருகி நிற்கும் பெற்றோரைக் காட்டிலும் இந்த உலகில் தவிப்பவர்கள் வேறு எவரும் இருக்க முடியாது. தங்களால் இயன்ற அனைத்து வழிகளிலும் போராடிப் பார்த்துவிட்ட அவளது பெற்றோர் தற்போது செய்வதறியாது திகைத்து நிற்கின்றனர்.
“எங்கள் கண் முன்னே எங்கள் மகள் உருகிக் கொண்டிருக்கிறாள், ஆனால் அவளைக் காப்பாற்றத் தேவையான பணம் எங்களிடம் இல்லை“ என்று உள்ளம் உருகி கூறுகின்றனர் அவளது பெற்றோர்.
மருத்துவர்களின் கூற்றுப்படி இந்த அவசர அறுவை சிகிச்சை மற்றும் மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொள்வதற்கு 5,000,000 இலங்கை ரூபாய் (50 இலட்சம்) தேவைப்படுகிறது. ஒரு சாதாரண நடுத்தரக் குடும்பத்திற்கு இந்தத் தொகை எட்டாக்கனியாகும்.
ஒவ்வொரு மனிதனின் உள்ளத்திலும் இருக்கும் ஈகை குணமே இத்தருணத்தில் அந்தச் சிறுமிக்கு மறுவாழ்வு அளிக்க முடியும். நாம் வழங்கும் ஒரு சிறிய பங்களிப்பு அந்தப் பெற்றோருக்குப் பெரும் நம்பிக்கையையும், அந்தச் சிறுமிக்கு புதியதொரு வாழ்வையும் பெற்றுத் தரும் என்பதில் ஐயமில்லை.
இன்றே உங்களால் இயன்ற நிதி உதவியை வழங்கி ஒரு குடும்பத்தின் ஒட்டுமொத்தக் கண்ணீரையும் துடைக்க முன்வாருங்கள்.
நிதி உதவிக்கான வங்கி விபரங்கள்:
கணக்கு பெயர் (Account Name): முகமது நப்லாஸ் கே.எல். (M. Nablas K.L.)
கணக்கு எண் (Account No): 228200340054024
வங்கி (Bank): மக்கள் வங்கி (People’s Bank)
கிளை (Branch): அட்டளைச்சேனை கிளை
சிறுமிக்கு உதவ நினைப்பவர்கள் அல்லது மேலதிக விபரங்களைப் பெற விரும்புவோர் அவளது பெற்றோரை நேரடியாகத் தொடர்பு கொள்ளலாம்:
திரு. நப்லாஸ் & திருமதி. ஆயிஷா பானு: 0759398628
உதவி செய்ய முடியாவிட்டாலும் இச்செய்தியைப் பிறருக்குப் பகிர்ந்து (Share) அந்தச் சிறுமிக்குத் தேவையான உதவி கிடைக்க வழிவகை செய்யுமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.