Top News
| அட்டாளைச்சேனை கிழக்கிலங்கை அறபுக் கல்லூரியில் 2027 ஆம் ஆண்டுக்கான புதிய மாணவர் அனுமதிக்கான விண்ணப்பம் கோரல் | | பாலமுனை தாருல் ஹஸனாத் வித்தியாலய வடிகான் நிர்மாணத்துக்கு நிதி ஒதுக்கீடு | | அம்பாறை மாவட்ட வீதி அபிவிருத்திக்கு ரூபா 4,066 மில்லியன் ஒதுக்கீடு |
Oct 15, 2026

ஜூன் மாதத்திற்கான லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை வெளியீடு

Posted on June 5, 2026 by Admin | 299 Views

ஜூன் மாதத்திற்கான லிட்ரோ சமையல் எரிவாயு விலைகளில் எவ்வித மாற்றமும் செய்யப்படமாட்டாது என லிட்ரோ நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதன் மூலம் நுகர்வோர் கடந்த மாத விலைகளிலேயே தொடர்ந்து எரிவாயுவை பெற்றுக்கொள்ள முடியும்.

நிறுவனத்தின் அறிவிப்பின்படி, சந்தையில் விற்பனை செய்யப்படும் லிட்ரோ எரிவாயு சிலிண்டர்களின் தற்போதைய விலையின்படி 12.5 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயு 4,765 ரூபாய்க்கும், 5 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயு விலை 1910 ரூபாய்க்கும், 2.3 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயு 890 ரூபாய்க்கு தொடர்ந்தும் விற்பனை செய்யப்படும் என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

கடந்த சில மாதங்களாக உலக சந்தை விலை மாற்றங்களுக்கு ஏற்ப எரிவாயு விலைகள் சீரமைக்கப்பட்டு வந்த நிலையில் இம்மாதம் விலைகளில் மாற்றம் எதுவும் இன்றி பழைய விலையிலேயே தொடர்வதற்கு நிறுவனம் தீர்மானித்துள்ளமை நுகர்வோருக்கு ஓரளவிற்கு நிம்மதியை அளிப்பதாக அமைந்துள்ளது.