Top News
| அட்டாளைச்சேனை கிழக்கிலங்கை அறபுக் கல்லூரியில் 2027 ஆம் ஆண்டுக்கான புதிய மாணவர் அனுமதிக்கான விண்ணப்பம் கோரல் | | பாலமுனை தாருல் ஹஸனாத் வித்தியாலய வடிகான் நிர்மாணத்துக்கு நிதி ஒதுக்கீடு | | அம்பாறை மாவட்ட வீதி அபிவிருத்திக்கு ரூபா 4,066 மில்லியன் ஒதுக்கீடு |
Oct 15, 2026

ஒத்திவைக்கப்பட்ட இலங்கை அதிபர் சேவைப் பரீட்சைக்கான திகதி அறிவிப்பு

Posted on June 5, 2026 by Admin | 201 Views

2025 ஆம் ஆண்டிற்கான இலங்கை அதிபர் சேவையின் மூன்றாம் தரத்திற்கான ஆட்சேர்ப்புக்கான வரையறுக்கப்பட்ட போட்டிப் பரீட்சை எதிர்வரும் ஜூன் மாதம் 7 ஆம் திகதி சனிக்கிழமை நாடுபூராகவும் நடத்தப்படவுள்ளது.

இப்பரீட்சைக்கான அனுமதி அட்டைகள் (Admission Cards) தற்போது வெளியிடப்பட்டுள்ளதாகத் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. விண்ணப்பதாரர்கள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்குச் சென்று தங்களது தேசிய அடையாள அட்டை இலக்கத்தை உள்ளிட்டு அனுமதி அட்டைகளைப் பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும்.

இப்பரீட்சையானது கடந்த ஏப்ரல் மாதம் 26 ஆம் திகதி நடத்துவதற்கு முன்னதாகத் திட்டமிடப்பட்டிருந்தது. எனினும் தவிர்க்க முடியாத காரணங்களினால் பரீட்சை காலவரையறையின்றி ஒத்திவைக்கப்படுவதாகக் கல்வி அமைச்சு கடந்த ஏப்ரல் மாதம் அறிவித்திருந்த நிலையிலேயே தற்போது புதிய திகதி அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.