Top News
| மருதமுனையில் கோர விபத்து:அரச உத்தியோகத்தர் சம்பவ இடத்திலேயே பலி | | உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் அதிரடி மாற்றங்கள் | | அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு பைத்துல் ஹிக்மா நிறுவனத்தின் மகத்தான கௌரவம் |
Jul 16, 2026

அட்டாளைச்சேனை பிரதேச விளையாட்டுப் போட்டியில் சாம்பியன் கிண்ணத்தை தட்டிச் சென்ற சுப்பர் சொனிக் கழகம்

Posted on June 10, 2026 by Admin | 101 Views

(அட்டாளைச்சேனை செய்தியாளர்- அப்னான்)

அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட விளையாட்டுப் பிரிவுகளுக்கிடையிலான “பிரதேச விளையாட்டுப் போட்டி – 2026” இன் இறுதிப் போட்டிகளும் பரிசளிப்பு விழாவும் அண்மையில் அட்டாளைச்சேனை அஷ்ரப் ஞாபகார்த்த பொது விளையாட்டு மைதானத்தில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது.

திறமைகளின் களமாக அமைந்த இப்போட்டித் தொடரில், ஒட்டுமொத்த புள்ளிகளின் அடிப்படையில் அட்டாளைச்சேனை ‘சுப்பர் சொனிக்’ விளையாட்டுக்கழகம் முதலிடத்தைப் பெற்று சாம்பியனாகத் தெரிவானது. அட்டாளைச்சேனை ‘சோபர்’ விளையாட்டுக்கழகம் இரண்டாமிடத்தையும், பாலமுனை ‘ரைஸ்டார்’ விளையாட்டுக்கழகம் மூன்றாமிடத்தையும் தமதாக்கிக் கொண்டன.

அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ஏ.சி.அஹமட் அப்கர் தலைமையில், பிரதேச செயலக விளையாட்டு உத்தியோகத்தர் ஆர்.றப்சானின் நெறிப்படுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் தேசிய மக்கள் சக்தியின் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பிரதேச அபிவிருத்தி குழுவின் தலைவருமான ஏ.ஆதம்பாவா பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பித்தார்.
கௌரவ அதிதியாக திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தேசிய அமைப்பாளருமான எம்.எஸ்.உதுமாலெப்பை கலந்துகொண்டதுடன், விசேட அதிதியாக அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எஸ்.எம்.உவைஸ் பங்கேற்றார்.

இவர்களுடன் உதவி பிரதேச செயலாளர் சட்டத்தரணி நஜீஹா முஸாபீர், கணக்காளர் எம்.எப்.எம்.பர்ஹான், பிரதேச சபையின் உதவித் தவிசாளர் பாறூக் நாஜி, பிரதேச சபை உறுப்பினர்களான ஏ.சி.நியாஸ், ஏ.எல்.பாயிஸ் (ADE), ஐ.எல்.அஸ்வர் சாலிஹ் மற்றும் பிரதேச செயலக நிருவாக உத்தியோகத்தர் எம்.ஏ.சி.றக்கீப் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் பாராளுமன்ற உறுப்பினர்களின் பிரத்தியேக செயலாளர்களான ஓய்வுநிலை அதிபர் எம்.ஏ.அன்சார், எஸ்.சத்தார் ஆசிரியர், எஸ்.எம்.ஆரீப் ஆகியோருடன் பிரதேச செயலக அதிகாரிகள், விளையாட்டுக்கழகங்களின் நிர்வாகிகள், வீரர்கள் மற்றும் பெருந்திரளான விளையாட்டு ரசிகர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்தனர். வெற்றி பெற்ற கழகங்களுக்கும் வீரர்களுக்கும் அதிதிகளால் பதக்கங்களும் கிண்ணங்களும் வழங்கி வைக்கப்பட்டன.