Top News
| அட்டாளைச்சேனை கிழக்கிலங்கை அறபுக் கல்லூரியில் 2027 ஆம் ஆண்டுக்கான புதிய மாணவர் அனுமதிக்கான விண்ணப்பம் கோரல் | | பாலமுனை தாருல் ஹஸனாத் வித்தியாலய வடிகான் நிர்மாணத்துக்கு நிதி ஒதுக்கீடு | | அம்பாறை மாவட்ட வீதி அபிவிருத்திக்கு ரூபா 4,066 மில்லியன் ஒதுக்கீடு |
Oct 15, 2026

சாதாரண, உயர்தரப் பரீட்சைகள் திட்டமிட்டபடி நடைபெறும்: கல்வி அமைச்சு அறிவிப்பு!

Posted on June 13, 2026 by Hafees | 196 Views

2026 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரம் மற்றும் உயர்தரப் பரீட்சைகள், முன்னதாக அறிவிக்கப்பட்ட கால அட்டவணையின்படி உரியத் தினங்களில் நடைபெறும் எனக் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. அதற்கமைய, பரீட்சைகளுக்கான பாடத்திட்டங்களை முழுமையாகக் கற்பித்து மாணவர்களைத் தயார்ப்படுத்துவதற்கான நடவடிக்கைகளைப் பாடசாலைகள் மேற்கொள்ள வேண்டும் எனக் கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார். பாடத்திட்டங்களை நிறைவு செய்வதில் தாமதம் காணப்படும் பாடசாலைகள், மேலதிக நேரத்தை ஒதுக்கி தேவையான திட்டமிடலுடன் செயற்பட்டுப் பாடத்திட்டங்களைப் பூர்த்தி செய்யுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பான விசேட அறிவுறுத்தல்கள் அடங்கிய கடிதம் அனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகக் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.