Top News
| அட்டாளைச்சேனை கிழக்கிலங்கை அறபுக் கல்லூரியில் 2027 ஆம் ஆண்டுக்கான புதிய மாணவர் அனுமதிக்கான விண்ணப்பம் கோரல் | | பாலமுனை தாருல் ஹஸனாத் வித்தியாலய வடிகான் நிர்மாணத்துக்கு நிதி ஒதுக்கீடு | | அம்பாறை மாவட்ட வீதி அபிவிருத்திக்கு ரூபா 4,066 மில்லியன் ஒதுக்கீடு |
Oct 15, 2026

கிழக்கு மாகாண புதிய உள்ளூராட்சி ஆணையாளராக ஏ.டி.எம். ராபி நியமனம்

Posted on June 15, 2026 by Admin | 212 Views

கிழக்கு மாகாண புதிய உள்ளூராட்சி ஆணையாளராக கல்முனை மாநகர சபையின் ஆணையாளராகக் கடமையாற்றிவரும் ஏ.டி.எம். ராபி அவர்கள் கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகரவினால் இன்று காலை நியமனக் கடிதம் உத்தியோகபூர்வமாக வழங்கி நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த ஒரு வருட காலமாக கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் பதவிக்கு நிரந்தரமான ஒருவர் நியமிக்கப்படாதிருந்த நிலையில் மாகாண விவசாய அமைச்சின் செயலாளர் ஏ.எல்.எம். அஸ்மி பதில் உள்ளூராட்சி ஆணையாளராகக் கடமையாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அந்தப் பதவிக்கு ஏ.டி.எம். ராபி நிரந்தரமாக நியமிக்கப்பட்டுள்ளார்.