Top News
| மருதமுனையில் கோர விபத்து:அரச உத்தியோகத்தர் சம்பவ இடத்திலேயே பலி | | உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் அதிரடி மாற்றங்கள் | | அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு பைத்துல் ஹிக்மா நிறுவனத்தின் மகத்தான கௌரவம் |
Jul 16, 2026

அட்டாளைச்சேனை லெஜண்ட்ஸ் பிரீமியர் லீக் சீசன் இரண்டுக்கான வீரர்களின் ஏலம் நிறைவு

Posted on June 15, 2026 by Admin | 81 Views

(அட்டாளைச்சேனை செய்தியாளர்)

அட்டாளைச்சேனை லெஜண்ட்ஸ் பிரீமியர் லீக் (LPL) கிரிக்கெட் தொடரின் இரண்டாவது பருவகாலத்திற்கான உத்தியோகபூர்வ வீரர்களின் ஏலம் லெஜண்ட்ஸ் பிரீமியர் லீக் அமைப்பின் தலைவர் எம்.என்.அப்துல்லாஹ் முப்பர்ரிஜ் தலைமையில் நேற்று(14) அட்டாளைச்சேனை சாரா பீச் ரிசார்ட்டில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதித் தேசிய அமைப்பாளரும், திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எஸ்.உதுமாலெப்பை கலந்துகொண்டு சிறப்பித்ததுடன், கௌரவ விருந்தினர்களாக அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எஸ்.எம்.உவைஸ், பிரதேச செயலாளர்களான எஸ்.எல்.முஹம்மட் ஹனீபா, எம்.ஏ.சி.ஏ.நஸீல் ஆகியோர் கலந்துகொண்டனர்.

விசேட அதிதியாக விஸன் ஹவுஸ் தனியார் நிறுவனத்தின் பணிப்பாளர் கே.எல்.கபூர், அதிதிகளாக ஓய்வுபெற்ற மாவட்ட மெய்வல்லுநர் பயிற்றுவிப்பாளர் (DSO) எஸ்.எல்.தாஜுதீன், ஓய்வுபெற்ற தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் உதவிப் பணிப்பாளர் யூ.எல்.மஜீத் ஆகியோருடன் போட்டி அனுசரணையாளர்கள், அணிகளின் உரிமையாளர்கள், விளையாட்டுக்கழக நிர்வாகிகள் மற்றும் எல்.பி.எல். நிர்வாகக் குழுவினரும் திரளாகக் கலந்துகொண்டு இந்நிகழ்வை சிறப்பித்தனர்.

அட்டாளைச்சேனை பிராந்தியத்தின் கிரிக்கெட் வரலாற்றில் முக்கிய மைல்கல்லாகக் கருதப்படும் இந்த வீரர்களின் ஏலத்தின் மூலம் அணிகளுக்கான வீரர்களைத் தெரிவு செய்யும் பணிகள் விறுவிறுப்பாக நிறைவடைந்தமை குறிப்பிடத்தக்கது.