Top News
| புதிய கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த அரசு தயார் நிலையில் இல்லை | | பால்மா விலை அதிகரிக்கப்பட்டுள்ளதா? வெளிவந்த உத்தியோகபூர்வ தகவல்! | | ஆலங்குளம் றஹ்மானியா வித்தியாலயத்திற்கு கிடைத்த இருமாடிக் கட்டடம் |
Aug 30, 2026

இன்று மீண்டும் அதிகரித்தது தங்கத்தின் விலை

Posted on June 15, 2026 by Admin | 136 Views

இலங்கையில் தங்கத்தின் விலை இன்றைய தினம் (15) திடீரென அதிரடி உயர்வைச் சந்தித்துள்ளது. உள்நாட்டு சந்தையில் தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் சுமார் 6,000 ரூபாவினால் அதிகரித்துள்ளதாக கொழும்பு செட்டியார் தெரு தங்க வர்த்தக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இன்றைய காலை நேர வர்த்தக நிலவரங்களின்படி, ஆபரணத் தயாரிப்புக்கு பயன்படுத்தப்படும் 22 கரட் தங்கம் பவுன் ஒன்றின் விலை 360,600 ரூபாவாகப் பதிவாகியுள்ளது. இதேவேளை தூய தங்கமாகக் கருதப்படும் 24 கரட் தங்கம் பவுன் ஒன்றின் விலை 392,000 ரூபா என்ற புதிய உச்சத்தைத் தொட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. உலகளாவிய சந்தை மாற்றங்கள் மற்றும் உள்நாட்டு பொருளாதாரக் காரணிகளே இந்த சடுதியான விலை அதிகரிப்புக்குக் காரணம் என சந்தை விபரமறிந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.