Top News
| மருதமுனையில் கோர விபத்து:அரச உத்தியோகத்தர் சம்பவ இடத்திலேயே பலி | | உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் அதிரடி மாற்றங்கள் | | அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு பைத்துல் ஹிக்மா நிறுவனத்தின் மகத்தான கௌரவம் |
Jul 16, 2026

அக்கரைப்பற்று கல்வி வலய ஆசிரிய இடமாற்றப் பட்டியல் வெளியீடு

Posted on June 18, 2026 by Admin | 446 Views

(பாலமுனை செய்தியாளர்)

அக்கரைப்பற்று கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான 2026ஆம் ஆண்டிற்குரிய வலயத்திற்குள்ளான வருடாந்த இடமாற்றப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

வலயக் கல்விப் பணிப்பாளர் பி.எம்.எம். அறபாத் முஹைதீன் அவர்களின் வழிகாட்டலில் ஒரே பாடசாலையில் 08 வருடங்கள் அல்லது அதற்கு மேல் கடமையாற்றிய ஆசிரியர்களை இடமாற்றத்திற்கு உட்படுத்துவதற்கும், பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் சமநிலையைச் சீர்செய்வதற்குமாக இந்த இடமாற்றங்கள் தீர்மானிக்கப்பட்டுள்ளன.

இடமாற்றச் சபையினது முடிவுகளுக்கு அமைவாகத் தயாரிக்கப்பட்ட இந்த ஆசிரியர் இடமாற்றப் பட்டியல் தற்போது உத்தியோகபூர்வமாகப் பிரசுரிக்கப்பட்டுள்ளது.
இவ்விடமாற்றப் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள ஆசிரியர்கள் தங்களுக்குரிய மேல்முறையீடுகளைச் செய்ய விரும்பின் தகுந்த காரணங்களுடன் கூடிய மேல்முறையீட்டுக் கடிதங்களைத் தமது அதிபர் ஊடாக எதிர்வரும் 2026 ஜூன் 30ஆம் திகதிக்கு முன்னர் வலயக் கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

அனைத்துப் பாடசாலை அதிபர்களும் தமது பாடசாலையில் இடமாற்றப் பட்டியலில் உள்வாங்கப்பட்டுள்ள ஆசிரியர்களுக்கு அதுகுறித்த அறிவித்தலை முறையாக வழங்குவதோடு இந்த இடமாற்ற நடைமுறைகளைச் செவ்வனே முன்னெடுப்பதற்குத் தங்களது பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும் எனவும் வலயக் கல்வி அலுவலகம் அறிவுறுத்தியுள்ளது.