Top News
| புதிய கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த அரசு தயார் நிலையில் இல்லை | | பால்மா விலை அதிகரிக்கப்பட்டுள்ளதா? வெளிவந்த உத்தியோகபூர்வ தகவல்! | | ஆலங்குளம் றஹ்மானியா வித்தியாலயத்திற்கு கிடைத்த இருமாடிக் கட்டடம் |
Aug 30, 2026

பஹ்ரைன் – இலங்கை பாராளுமன்ற நட்புறவு ஒன்றிய உப தலைவராக ஆதம்பாவா எம்பி நியமனம்

Posted on June 27, 2026 by Admin | 137 Views

(சாய்ந்தமருது செய்தியாளர் -நவாஸ் )

பஹ்ரைன் – இலங்கை பாராளுமன்ற நட்புறவு ஒன்றியத்தின் உப தலைவராக திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், அரசியலமைப்பு பேரவை உறுப்பினருமான அபூபக்கர் ஆதம்பாவா நியமிக்கப்பட்டுள்ளார்.

திகாமடுல்ல மாவட்ட கரையோர பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவராகவும் செயற்பட்டு வருவதுடன் சர்வதேச ரீதியிலான பாராளுமன்ற உறவுகளை வலுப்படுத்துவதில் முக்கிய பங்காற்றி வருகின்றார்.

இப்புதிய நியமனத்திற்கு மேலதிகமாக அவர் ஏற்கனவே இந்தோனேசியா – இலங்கை பாராளுமன்ற நட்புறவு ஒன்றியத்தின் செயலாளராகவும், சவூதி அரேபியா – இலங்கை பாராளுமன்ற நட்புறவு ஒன்றியத்தின் உப தலைவராகவும் வெற்றிகரமாகக் கடமையாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இவரது இந்த புதிய பதவிகள் மூலம் இலங்கைக்கும் அரபு மற்றும் ஆசிய நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு மற்றும் ராஜதந்திர உறவுகள் மேலும் பலப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.