Top News
| சுற்றுலாப் பணியக நிதி மோசடி: முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவை கைது செய்ய பிடியாணை | | மு.கா.வின் 40ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ‘லீடர் அஷ்ரப் கிண்ண’ மென்பந்து கிரிக்கெட் சமர் | | மட்டக்களப்பு கல்லடி பாலத்திலிருந்து வாவியில் குதித்த 19 வயது யுவதி |
Oct 14, 2026

றிஷாட் பதியுதீன் எம்பி முன்னிலையில் மன்னார் தாராபுரம் அல்-மினா கல்லூரி மாணவர்களுக்கு பாராட்டு விழா

Posted on July 1, 2026 by Admin | 216 Views

(கல்முனை செய்தியாளர்- பாரிஸ்)

மன்னார் தாராபுரம் அல்-மினா மகாவித்தியாலயத்தில் இவ்வருடம் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கான பிரியாவிடை மற்றும் பரிசளிப்பு விழா பாடசாலை அதிபர் பளீல் அவர்களின் தலைமையில் இன்று (01) பாடசாலை கேட்போர் கூடத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு சிறப்பித்தார். நிகழ்வின் கௌரவ அதிதிகளாக மன்னார் மாவட்ட அடிப்படை உரிமைகள் அமைப்பின் சமாதானத் தூதுவரும் தொழிலதிபருமான ஷேக் அமானி, வட மாகாண இளைஞர் சேவைகள் மன்றத்தின் முன்னாள் பணிப்பாளர் முனவ்வர், வனவள திணைக்கள உத்தியோகஸ்தர் ரிபாயிஸ் மற்றும் மன்னார் பிரதேச சபை உறுப்பினர் உவைஸ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

அதிபரும் சட்டத்தரணியுமான தவராசா, மன்னார் வலய ஆசிரிய ஆலோசகர் அருள்ணாதன், பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், ஆசிரியர்கள், கல்விசாரா ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் உள்ளிட்ட பலரும் இந்நிகழ்வில் பங்கேற்று உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களை வாழ்த்தி வழி அனுப்பி வைத்தனர்.