Top News
| புதிய கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த அரசு தயார் நிலையில் இல்லை | | பால்மா விலை அதிகரிக்கப்பட்டுள்ளதா? வெளிவந்த உத்தியோகபூர்வ தகவல்! | | ஆலங்குளம் றஹ்மானியா வித்தியாலயத்திற்கு கிடைத்த இருமாடிக் கட்டடம் |
Aug 30, 2026

தேசிய மட்ட ஒலிம்பியாட் போட்டிக்கு தெரிவாகி அக்கரைப்பற்று மத்திய கல்லூரி மாணவி சாதனை

Posted on July 5, 2026 by Admin | 386 Views

(அக்கரைப்பற்று செய்தியாளர்- ராஜி)

அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரியின் தரம் 11 இருமொழிக் கற்கைப் பிரிவு மாணவி பாத்திமா இப்பத் மாகாண மட்ட ஆங்கில மொழி மூல விஞ்ஞான ஒலிம்பியாட் போட்டியில் இரண்டாம் இடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.

இவ்வெற்றியின் ஊடாக தேசிய மட்ட ஒலிம்பியாட் போட்டிக்குத் அவர் தகுதி பெற்று அக்கரைப்பற்று கல்வி வலயத்திற்கும் கிழக்கு மாகாணத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.

அவரது இந்த வரலாற்றுச் சாதனையைப் பாராட்டி கடந்த ஜூன் 24ஆம் திகதி புதன்கிழமை அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிமனையில் பிரம்மாண்டமான கௌரவிப்பு நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

உலகளாவிய ரீதியில் விஞ்ஞான மற்றும் தொழில்நுட்பத் துறைகள் அதிவேகமாக வளர்ந்து வரும் இக்காலகட்டத்தில் பிராந்திய மட்டத்திலிருந்து இவ்வாறான திறமைமிக்க மாணவர்கள் உருவாவது எதிர்கால விஞ்ஞான உலகிற்கு ஆரோக்கியமான அடையாளமாகும்.

இவ்விழாவில் அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர் வை.அறபாத் முகைதீன், பிரதிக் கல்விப் பணிப்பாளர்களான ஏ.எல்.ஏ.மஜீத், ஏ.எச்.பெளஸ், ஏ.பி.பாத்திமா நஸ்மியா, பாடசாலையின் பிரதி அதிபர் மற்றும் ஆசிரிய ஆலோசகர்கள் எனப் பல முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டு மாணவியின் திறமையைப் பாராட்டி வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.