Top News
| புதிய கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த அரசு தயார் நிலையில் இல்லை | | பால்மா விலை அதிகரிக்கப்பட்டுள்ளதா? வெளிவந்த உத்தியோகபூர்வ தகவல்! | | ஆலங்குளம் றஹ்மானியா வித்தியாலயத்திற்கு கிடைத்த இருமாடிக் கட்டடம் |
Aug 30, 2026

சம்மாந்துறையில் மாடு மேய்க்கச் சென்ற குடும்பஸ்தர் சடலமாக மீட்பு

Posted on July 5, 2026 by Admin | 166 Views

(சம்மாந்துறை செய்தியாளர் – கிருபா)

சம்மாந்துறை, பழைய வளத்தாப்பிட்டி கிராமம் – 01 பகுதியைச் சேர்ந்த 57 வயதுடைய மயில்வாகனம் வாசு என்ற குடும்பஸ்தர் மாடு மேய்க்கச் சென்ற இடத்தில் திடீரென உயிரிழந்துள்ளார்.

வழக்கம் போல் தனது கால்நடைகளை மேய்ப்பதற்காகச் சென்றவர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் உறவினர்கள் தேடிச் சென்றுள்ளனர். இதன்போது அவர் வயல் பகுதியை ஒட்டிய மேய்ச்சல் தரையில் சடலமாக மீட்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இச்சம்பவம் குறித்த மரண விசாரணைகளை சம்மாந்துறை நீதவான் நீதிமன்றத்தின் பதில் நீதிவான் கௌரவ A. M. நஷீல் நேரில் சென்று முன்னெடுத்தார்.

மரணத்திற்கான துல்லியமான காரணம் மாரடைப்பா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது தொடர்பில் சம்மாந்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.