Top News
| அம்பாறை மாவட்ட வீதி அபிவிருத்திக்கு ரூபா 4,066 மில்லியன் ஒதுக்கீடு | | சுற்றுலாப் பணியக நிதி மோசடி: முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவை கைது செய்ய பிடியாணை | | மு.கா.வின் 40ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ‘லீடர் அஷ்ரப் கிண்ண’ மென்பந்து கிரிக்கெட் சமர் |
Oct 15, 2026

அட்டாளைச்சேனை அறபா வித்தியாலயத்திற்கு புதிய அதிபராக ஓ.எல்.எம்.றிஸ்வான் தெரிவு

Posted on August 6, 2026 by Admin | 168 Views

அக்கறைப்பற்று கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளில் நீண்டகாலமாக நிலவி வந்த அதிபர் வெற்றிடங்களை நிரப்பும் நோக்கில் தெரிவு செய்யப்பட்ட புதிய அதிபர்களின் உத்தியோகபூர்வ பெயர்ப்பட்டியல் அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது.

அக்கறைப்பற்று கல்வி வலயத்தின் பாடசாலைகளில் நிலவும் நிர்வாகத் தேவையைக் கருத்திற்கொண்டு நடாத்தப்பட்ட நேர்முகப் பரீட்சைகளின் முடிவுகளின் பிரகாரம், தகைமைபெற்ற புதிய அதிபர்களின் விபரங்கள் மற்றும் அவற்றுக்குரிய பாடசாலைகளின் விபரங்கள் வெளியாகியுள்ளன.

இதற்கமைய, குறித்த நியமனங்களின் பிரகாரம் அட்டாளைச்சேனை அறபா வித்தியாலய புதிய அதிபராக ஓ.எல்.எம். றிஸ்வான் அவர்கள் உத்தியோகபூர்வமாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.