Top News
| பார்வையற்றோருக்கான AI கண்ணாடியை உருவாக்கிய அட்டாளைச்சேனை இளைஞனுக்கு அமெரிக்காவில் சர்வதேச அங்கீகாரம் | | பதிவாளர் தரம் II போட்டிப் பரீட்சையில் அட்டாளைச்சேனையை சேர்ந்த பைறூஸ் தெரிவு | | இன நல்லுறவில் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் நிர்வாகத்தினர் தீ மூட்ட வேண்டாம் |
Aug 16, 2026

அக்கரைப்பற்று அல் பாயிஷா மகா வித்தியாலயத்திற்கு புதிய அதிபராக எம்.ஏ.சலாஹுத்தின் தெரிவு

Posted on August 6, 2026 by Admin | 96 Views

அக்கறைப்பற்று கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளில் நீண்டகாலமாக நிலவி வந்த அதிபர் வெற்றிடங்களை நிரப்பும் நோக்கில் தெரிவு செய்யப்பட்ட புதிய அதிபர்களின் உத்தியோகபூர்வ பெயர்ப்பட்டியல் அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது.

அக்கறைப்பற்று கல்வி வலயத்தின் பாடசாலைகளில் நிலவும் நிர்வாகத் தேவையைக் கருத்திற்கொண்டு நடாத்தப்பட்ட நேர்முகப் பரீட்சைகளின் முடிவுகளின் பிரகாரம், தகைமைபெற்ற புதிய அதிபர்களின் விபரங்கள் மற்றும் அவற்றுக்குரிய பாடசாலைகளின் விபரங்கள் வெளியாகியுள்ளன.

இதற்கமைய, குறித்த நியமனங்களின் பிரகாரம் அக்கரைப்பற்று, குடியிருப்பு ,அல் பாயிஸா மகா வித்தியாலய புதிய அதிபராக எம்.ஏ.சலாஹுதீன் அவர்கள் உத்தியோகபூர்வமாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.