Top News
| சுற்றுலாப் பணியக நிதி மோசடி: முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவை கைது செய்ய பிடியாணை | | மு.கா.வின் 40ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ‘லீடர் அஷ்ரப் கிண்ண’ மென்பந்து கிரிக்கெட் சமர் | | மட்டக்களப்பு கல்லடி பாலத்திலிருந்து வாவியில் குதித்த 19 வயது யுவதி |
Oct 15, 2026

அட்டாளைச்சேனை அறபா வித்தியாலயத்தின் புதிய அதிபராக ஓ.எல்.எம்.றிஸ்வான் கடமையேற்பு

Posted on September 15, 2026 by Admin | 141 Views

(அட்டாளைச்சேனை செய்தியாளர்)

அட்டாளைச்சேனை அறபா வித்தியாலயத்தின் புதிய அதிபராக ஓ.எல்.எம்.றிஸ்வான் இன்று(15) உத்தியோகபூர்வமாகத் தனது கடமைகளைப் பொறுப்பேற்கும் நிகழ்வு அதிபர் எம்.ஐ.எம்.அஜ்மீர் தலைமையில் நடைபெற்றது.

பாடசாலை வளாகத்தில் இடம்பெற்ற இக்கடமையேற்பு நிகழ்வில் புதிய அதிபர் ஓ.எல்.எம்.றிஸ்வான் அவர்களை பாடசாலையின் முன்னாள் அதிபர் எம்.ஐ.எம்.அஜ்மீர் வரவேற்றதுடன் பாடசாலையின் நிர்வாக ஆவணங்களைக் கையளித்து தனது மனமார்ந்த வாழ்த்துகளையும் தெரிவித்தார்.

இப்பதவியேற்பு நிகழ்வில் அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலகத்தின் பிரதிக் கல்விப் பணிப்பாளர்களான ஏ.ஜி.பௌஸ், பி.ஜியானா , அட்டாளைச்சேனை கோட்டக் கல்விப் பணிப்பாளர் எம்.எச்.எம்.றஸ்மி, அட்டாளைச்சேனை கோட்டத்திற்குட்பட்ட பாடசாலைகளின் அதிபர்கள், முன்னாள் வலயக் கல்விப் பணிப்பாளர், ஓய்வுபெற்ற அதிபர்கள், ஆசிரியர்கள், ஆசிரிய ஆலோசகர்கள், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள், பழைய மாணவர்கள், நலன்விரும்பிகள் மற்றும் புதிய அதிபரின் குடும்பத்தினர் எனப் பலரும் கலந்துகொண்டு புதிய அதிபருக்குத் தமது வாழ்த்துகளைப் பகிர்ந்துகொண்டனர்.

புதிய அதிபராகப் பொறுப்பேற்றுள்ள ஓ.எல்.எம்.றிஸ்வான், கல்வி நிர்வாகத்துறையில் சிறந்த அனுபவமிக்கவராவார். இவரது வினைத்திறனான வழிகாட்டலின் கீழ் அட்டாளைச்சேனை அறபா வித்தியாலயம் மாணவர்களின் கல்வி அடைவு மட்டங்கள், இணைப்பாடவிதான செயற்பாடுகள் மற்றும் பௌதீக வள அபிவிருத்தி ஆகியவற்றில் மேலும் பல புதிய மைல்கற்களை எட்டும் என பாடசாலை சமூகத்தினரும் பிரதேச மக்களும் பெரும் எதிர்பார்ப்பினை வெளியிட்டுள்ளனர்.

முன்னாள் அதிபர் எம்.ஐ.எம்.அஜ்மீர் அவர்களின் சிறப்பான சேவைகளைத் தொடர்ந்து பாடசாலையை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தும் பொறுப்பு தற்போது புதிய அதிபரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.