Top News
| சுற்றுலாப் பணியக நிதி மோசடி: முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவை கைது செய்ய பிடியாணை | | மு.கா.வின் 40ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ‘லீடர் அஷ்ரப் கிண்ண’ மென்பந்து கிரிக்கெட் சமர் | | மட்டக்களப்பு கல்லடி பாலத்திலிருந்து வாவியில் குதித்த 19 வயது யுவதி |
Oct 15, 2026

3 பதக்கங்களை சுவீகரித்த பொத்துவில் அஸ்ஜத் தேசிய மட்டத்திற்கு தெரிவு

Posted on October 4, 2026 by Admin | 75 Views

அட்டாளைச்சேனை பொது விளையாட்டு மைதானத்தில் இன்று (04) நடைபெற்ற 36ஆவது அம்பாறை மாவட்ட மட்ட இளைஞர் விளையாட்டு விழாவில் பொத்துவில் பிரதேசத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி கலந்துகொண்ட இளம் மெய்வல்லுநர் வீரர் ஜே. அஸ்ஜத் மூன்று பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார்.

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் வழிகாட்டலில் நடைபெற்ற இந்த விளையாட்டு விழாவில் தனது சிறப்பான விளையாட்டுத் திறன்களை வெளிப்படுத்திய அஸ்ஜத் பின்வரும் பதக்கங்களைச் சுவீகரித்துக் கொண்டார்:

 200 மீற்றர் ஓட்டப் போட்டி: தங்கப் பதக்கம் (முதலாம் இடம்) 🥇

 100 மீற்றர் ஓட்டப் போட்டி: வெள்ளிப் பதக்கம் (இரண்டாம் இடம்) 🥈

 நீளம் பாய்தல்: வெள்ளிப் பதக்கம் (இரண்டாம் இடம்) 🥈

இந்த மாவட்ட மட்டப் போட்டிகளில் வெளிப்படுத்திய அபார வெற்றியின் மூலம் எதிர்வரும் மாதம் நடைபெறவுள்ள தேசிய மட்ட இளைஞர் விளையாட்டு விழாவில் அம்பாறை மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திப் போட்டியிடுவதற்கான தகுதியையும் அவர் பெற்றுக்கொண்டுள்ளார்.

பொத்துவில் மண்ணுக்கும், தான் கல்வி கற்கும் பாடசாலைக்கும், தனது குடும்பத்திற்கும் பெரும் புகழைத் தேடித்தந்துள்ள இந்த இளம் வீரர் எதிர்வரும் காலங்களில் தேசிய மட்டத்திலும் பல சாதனைகளை நிலைநாட்டி விளையாட்டுத் துறையில் வரலாறு படைக்க வேண்டும் என பிரதேச விளையாட்டு ஆர்வலர்களும், கல்விச் சமூகத்தினரும், பொதுமக்களும் தமது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.