Top News
| சுற்றுலாப் பணியக நிதி மோசடி: முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவை கைது செய்ய பிடியாணை | | மு.கா.வின் 40ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ‘லீடர் அஷ்ரப் கிண்ண’ மென்பந்து கிரிக்கெட் சமர் | | மட்டக்களப்பு கல்லடி பாலத்திலிருந்து வாவியில் குதித்த 19 வயது யுவதி |
Oct 14, 2026

கிழக்கு மாகாண ஆங்கிலப் பேச்சுப் போட்டியில் அக்கரைப்பற்று மத்திய கல்லூரி மாணவி திக்ரா ஹாஜர் முதலிடம்

Posted on October 12, 2026 by Admin | 74 Views

கிழக்கு மாகாண மட்ட ஆங்கில மொழித்தினப் போட்டிகளில் அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரியின் (தேசிய பாடசாலை) இருமொழிக் கல்விப் பிரிவு மாணவி அகில் அஹ்மட் சரிபுத்தீன் திக்ரா ஹாஜர் முதலாம் இடத்தைப் பெற்று தேசிய மட்டப் போட்டிகளுக்குத் தெரிவாகியுள்ளார்.

நேற்று (11) நடைபெற்ற ஆங்கில மொழித்தின உடனடிப் பேச்சுப் போட்டியில் (Oratory Impromptu) பங்கேற்ற இவர் தனது சிறப்பான ஆற்றலை வெளிப்படுத்தி மாகாண மட்டத்தில் இச்சாதனையை நிலைநாட்டியுள்ளார்.

தலைப்பு வழங்கப்பட்டவுடன் ஆங்கில மொழியில் உடனடியாகச் சிந்தித்து, கருத்துக்களைத் தெளிவாகவும் தன்னம்பிக்கையுடனும் வெளிப்படுத்தும் சவால் மிகுந்த இப்போட்டியில் மாணவி திக்ரா ஹாஜர் பெற்றுள்ள வெற்றியானது, அவரது திறமைக்கும் விடாமுயற்சிக்கும் சிறந்த சான்றாக அமைந்துள்ளது.

இருமொழிக் கல்வித்திட்டமானது வெறுமனே ஆங்கிலத்தில் பாடங்களைக் கற்பது மட்டுமன்றி, உலகை எதிர்கொள்ளும் அறிவு, ஆளுமை, தொடர்பாடல் திறன் மற்றும் தன்னம்பிக்கையை மாணவர்களிடம் உருவாக்குகிறது என்பதற்கு இந்தச் சாதனை சிறந்த உதாரணமாகத் திகழ்கிறது.

மாகாண மட்டத்தில் முதலிடம் பெற்று பாடசாலைக்கும், அக்கரைப்பற்று மண்ணுக்கும் பெருமை சேர்த்துள்ள மாணவி, அவரை சிறந்த முறையில் வழிநடத்திய ஆசிரியர்கள், ஊக்கமளித்த பெற்றோர், பாடசாலை அதிபர் மற்றும் நிர்வாகத்தினருக்கு WESSMI (இருமொழிக் கல்விப் பிரிவு மாணவர்களின் பெற்றோர் ஒன்றியம்) தமது மனமார்ந்த பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளதுடன் தேசிய மட்டத்திலும் அவர் சாதனை படைக்கத் தமது பிரார்த்தனைகளையும் பதிவு செய்துள்ளது.