Top News
| அட்டாளைச்சேனை அறபா வித்தியாலயத்தில் தளபாட மோசடியா? போலிச் செய்திக்கு SDEC கடும் கண்டனம் | | சர்வதேச விஞ்ஞான ஒலிம்பியாட்டில் நாட்டுக்குப் பெருமை சேர்த்த அக்கரைப்பற்று அல்-முனவ்வரா மாணவி அனாபா | | பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷவுக்கு 23 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியல் |
Oct 16, 2026

ATM, CDM இயந்திரங்களுக்கு அருகில் புதிய மோசடி: பொதுமக்களுக்கு பொலிஸார் அவசர எச்சரிக்கை

Posted on October 16, 2026 by Admin | 47 Views

நாடு முழுவதும் உள்ள தானியங்கி பணப்பரிமாற்ற இயந்திரங்கள் (ATM) மற்றும் பண வைப்பு இயந்திரங்களுக்கு (CDM) அருகில் தற்போது அரங்கேறி வரும் புதிய வகையான நிதி மோசடிகள் தொடர்பில் பொலிஸார் பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கையொன்றை விடுத்துள்ளனர்.

பணப்பரிமாற்ற இயந்திரங்களுக்கு அருகில் தந்திரமான முறையில் மோசடியில் ஈடுபடும் நபர்கள் தொடர்பில் மக்கள் மிகவும் விழிப்புடன் செயற்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

CDM இயந்திரங்களுக்கு அருகில் இலக்கு வைத்து காத்திருக்கும் இந்த மோசடிக்காரர்கள் இயந்திரத்தில் தங்களால் பணத்தை வைப்புச் செய்ய முடியவில்லை என அப்பாவிப் பொதுமக்களிடம் உதவி கோருவது போல் நடிக்கின்றனர். பின்னர் தமக்குத் தேவையான பணத்தை மாற்றித் தருமாறு அவர்களிடம் கோருகின்றனர்.

ஆரம்பத்தில் 500 ரூபாய் போன்ற சிறிய நாணயத்தாள்களை வழங்கி பொதுமக்களின் நம்பிக்கையை வெல்லும் இவர்கள் அடுத்தகட்டமாக இந்த மோசடியை மிகவும் தந்திரமான முறையில் முன்னெடுக்கின்றனர். பொதுமக்கள் தாம் மாற்றி வழங்கிய பணம் குறித்து அவர்களிடம் மீளக் கேட்கும்போது தாங்கள் எந்தப் பணத்தையும் பெற்றுக்கொள்ளவில்லை என திட்டவட்டமாக மறுத்து பொதுமக்களை ஏமாற்றிப் பணத்தை சுருட்டும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.

எனவே, பொதுமக்கள் தங்களது பணத்தேவைகளுக்காக ATM மற்றும் CDM இயந்திரங்களைப் பயன்படுத்தச் செல்லும்போது அங்கு முன்பின் தெரியாத நபர்களுடன் எவ்வித பணப்பரிமாற்றங்களிலுமோ அல்லது அவர்களுக்கு உதவுவதிலோ ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இவ்வாறான மோசடிக்காரர்கள் நடமாடுவதையோ அல்லது சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகள் எவற்றையேனும் அவதானித்தாலோ உடனடியாக அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கோ அல்லது பொலிஸ் அவசரப் பிரிவிற்கோ தகவல் வழங்குமாறு பொலிஸ் திணைக்களம் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.